காவிரி: எங்கள் பொறுமையை சோதிக்காதீர்கள்- குமாரசாமி

  ஐஸ்வர்யா   | Last Modified : 23 Jun, 2018 06:20 pm
kumarasamy-speaks-about-cauvery-issue

காவிரி மேலாண்மை ஆணைய விவகாரத்தில் எங்களது பொறுமையை சோதிக்க வேண்டாம் என கர்நாடகா முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமி, “காவிரி மேலாண்மை ஆணையம் ஒருதலைபட்சமாக அமைக்கப்பட்டு உள்ளது. கர்நாடகா எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் எங்களை கலந்து ஆலோசிக்காமல் ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்றத்தில் விவாதம் செய்துவிட்டு ஆணையத்தை அமைக்குமாறு கூறினோம் ஆனால் எங்கள் கருத்துக்கு மதிப்பு அளிக்கவில்லை. 

நாங்கள் பொறுமையாக இருக்கின்றோம் என்பதால் தவறாக பயன்படுத்துகிறார்கள், எங்களது பொறுமையை சோதிக்கின்றனர். இந்த பிரச்சினை தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து உள்ளேன். மேலும் ஆலோசனைக்கு பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மத்திய நீர் பாசன அமைச்சரை தொடர்புகொண்டு இது தொடர்பாக பேசி உள்ளேன். அமைச்சர் 15 நாட்களில் நேரில் சந்தித்து இது தொடர்பாக பேச நேரம் ஒதுக்குவதாக தெரிவித்து உள்ளார்” என கூரினார். 

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் குமாரசாமி, "நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்ற பின்னரே, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைத்திருக்க வேண்டும்" என கூறியது குறிப்பிடதக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close