ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது; நிரவ் மோடிக்கு ரெட் கார்னர் நோட்டிஸ்

  ஐஸ்வர்யா   | Last Modified : 23 Jun, 2018 08:54 pm
interpol-red-corner-notice-against-nirav-modi

வங்கி மோசடியில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிரவ் மோடிக்கு இன்டர்போல் விரைவில் ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல கோடி மோசடி செய்த தொழிலதிபர் நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டனர். அவர்களை இந்தியாவிற்கு கொண்டு வரும் முயற்சியில், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஈடுபட்டுள்ளது. மேலும் நிரவ் மோடியின் சொத்துகளையும் அமலாக்கத்துறை முடக்கிவருகிறது. 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஊழல் விவகாரத்தில், நிரவ் மோடிக்கு தொடர்பு இருப்பது சிபிஐ அளித்துள்ள ஆவணங்கள் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளதால், இன்டர்போல், நிரவ் மோடிக்கு விரைவில் ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டவர்கள், எந்த நாட்டில் இருந்தாலும், அந்த நாட்டு அரசு, அவர்களை கைது செய்து, இன்டர்போல் போலீசிடம் ஒப்படைக்க வேண்டும். ஏற்கனவே பல போலி பாஸ்போர்ட்டுகளை வைத்துகொண்டு உலகம் சுற்றிவரும் நிரவ் மோடி இனி விமானநிலையங்களுக்கு வந்து வேறு நாட்டுக்கு செல்ல முடியாது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close