344 ஆண்டுகள் பழமையான சத்ரபதி சிவாஜியின் கடிதம் கண்டெடுப்பு

  Newstm Desk   | Last Modified : 27 Jun, 2018 10:28 am
344-year-old-chhatrapati-shivaji-s-original-letter-found-in-dhule

344 ஆண்டுகள் பழமையான மராட்டிய மன்னர் சிவாஜி எழுதிய கடிதம் மை கூட அழியாத நிலையில் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. 

மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ஞான்ஷியாம் என்பவர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களை சேகரித்து வருகிறார். மராட்டிய மாநிலம், துலேவில் உள்ள சமர்த் வக்தேவா கோயிலை சேர்ந்த சங்கர் தேவ் என்பவர் பாதுகாத்து வைத்திருந்த பொருட்களை ஞான்ஷியாம் ஆய்வு செய்த போது ஓரு கடிதம் கிடைத்துள்ளது.

அதை ஆய்வு செய்தபோது, அது மன்னர் சிவாஜி எழுதியதாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. இதைத் தொடர்ந்து, கடிதத்தை மேலும் ஆய்வு செய்வதற்காக அவர் எடுத்து வந்தார். ஆய்வில் அது. சிவாஜி மன்னராக முடிசூடுவதற்கு 5 மாதங்களுக்கு முன்பு இந்த கடிதம் எழுதப்பட்டது என தெரிய வந்துள்ளது.

இந்த கடிதம் 1674ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி எழுதப்பட்டுள்ளது. இத்தனை காலம் ஆகியும் கடிதத்தின் மை அழியாமலும், எழுத்துக்கள் சிதையாமல்  தெளிவாகவும் இருக்கின்றன என்று ஞான்ஷியாம் கூறினார். கடிதத்தின் உள்ள கைெயழுத்து சிவாஜி மகாராஜாவின் கையெழுத்துக்களை  ஒத்திருப்பதாகவும், கடிதத்தில் அவருடைய முத்திரை இடப்பட்டுள்ளது என்றும் ஞான்ஷியாம் கூறினார். கடிதம் 1.3 அடி நீளமும் 6.5 அங்குலம்  அகலமும் கொண்டது.

1673ம் ஆண்டு சாதார பகுதியை தனது கட்டுக்பாட்டுக்குள் வைத்திருந்தார் சிவாஜி. அப்போது அந்த பகுதியில் உள்ள பாலி கிராமத்தில் யார் தலைவராவது என்பது குறித்த பிரச்னை ஏற்பட்டது. கல்பார் (பாட்டீல்) மற்றும் கராடே குடும்பத்தினருக்கும் இடையே இந்த பிரச்னை நடந்து கொண்டு இருந்த போது சிவாஜி இந்த கடிதத்தை பாட்டீல் குடும்பத்தினருக்கு எழுதி உள்ளார். அதில், கல்பார்தான் கிராமத்தின் தலைவர் என்றும் கராடே குடும்பத்தை கண்டு பயப்பட வேண்டாம் என்றும் அந்த கடிதத்தில் சிவாஜி தெரிவித்துள்ளார்.  

மேலும் தனது பொருப்பாளர் சுபேதார் அபாஜி மோர்தாவ்க்கும் சிவாஜி ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கராடே குடும்பம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். 

இந்த கடித்ததின் பின்புறம் சிவாஜியின், அமைச்சர் மோராபந்த் பிங்காளேயின் முத்திரை இடப்பட்டுள்ளது என்றும் கடிதத்தின்  பின்பக்கத்தில் கடிதம் எழுதப்பட்ட தேதி குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் ஞான்ஷியாம் கூறினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close