11 பேரின் மர்ம மரணம்: மந்திரவாதியை குறிவைக்கும் டெல்லி போலீஸ்!

  Padmapriya   | Last Modified : 03 Jul, 2018 05:56 pm
mysterious-tantric-gada-baba-behind-burari-deaths

டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மர்ம மரணமடைந்து கிடந்த விவகாரத்தில், மேலும் ஒரு திருப்பமாக மந்திரவாதி காடா பாபா என்பவருக்கு தொடர்பு இருப்பதாக வலுவான சந்தேகம் போலீஸுக்கு எழுந்துள்ளது. தலைமறைவானதாக கூறப்படும் மந்திரவாதி காடா பாபாவைத் தேடும் முயற்சியில் போலீஸார் இறங்கியுள்ளனர்.

டெல்லியில் பூட்டப்பட்ட வீட்டில் இருந்து 11 பேரின் உடல்களை போலீசார் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைப்பற்றினர். கூட்டு தற்கொலையில் ஈடுபட்டனரா அல்லது கொலை செய்யப்பட்டனரா என்று முதலில் சந்தேகம் எழுந்த நிலையில், அங்கிருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் பல திடுக்கிட்டும் தகவல்கள் சிக்கின. 

இதனிடையே இறந்தவர்களில் 8 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டதில், அதில் கொலைக்கான எந்த அறிகுறியும் இல்லை என உறுதியாகியுள்ளது. உறவினர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் இது தற்கொலை அல்ல, தூண்டுதலின்பேரில் நடந்திருக்கலாம். தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு உறவினர்கள் மூடநம்பிக்கை கொண்டவர்கள் அவர்கள் இல்லை என்று கூறப்படுகிறது. 

குடும்பத் தலைவரான லலித் பாட்டியா என்பவர் மட்டும் மாந்திரீக விஷயங்களில் ஈடுபாட்டுடன் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது மகனுக்கு பேச வராமல் இருந்த நிலையில், மாந்திரீகத்தின் மூலம் பேச்சு வந்ததால், அவர் அதில் நம்பிக்கை கொண்டுள்ளார். 

மேலும், பிரேத பரிசோதனையில், லலித் பாட்டியா மற்றும் அவரது மனைவி டினா ஆகியோர்தான் கடைசியில் தற்கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும், மற்றவர்கள் தற்கொலை செய்ய உதவி பின் இவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கக் கூடும் என விசாரணையில் தெரியவந்துள்ளது. 

சிக்கிய டைரி குறிப்பின்படி, கடவுளைச் சந்திப்பதற்காகத்தான் தற்கொலை செய்கிறோம். ஆன்மா தான் நிலையானது, உடல் நிலையில்லாதது என்றவர்களின் எண்ணம் வெளிப்படுவதாக உள்ளது. 

இந்த நிலையில், தற்கொலை செய்து கொண்டவர்கள் குடும்பத்துக்கும் காடா பாபா என்ற மந்திரவாதி ஒருவருக்கும் இடையே தொடர்பு இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவ்வப்போது அந்த மந்திரவாதியை ஆலமரத்தின் அடியில் குடும்பத்தினர் சந்தித்து பூஜை மேற்கொண்டது தெரியவந்துள்ளது. அதே போல, டைரியில் ஆலமர வழிபாடு, மந்திரவாதிக்கு ஆலமரத்தின் அடியில் பூஜை செய்தது, ஆலமரத்து விழுதுகள் தொங்குவதுபோல், அனைவரின் உடல்களும் தொங்கியது அனைத்தும் ஒவ்வொன்றுக்கும் தொடர்புடையதாக போலீசாரின் சந்தேகத்தை வலுக்க செய்வதாக உள்ளது. 

இதனால் அந்த மந்திரவாதி, இவர்கள் 11 பேரையும் மூளைச்சலவை செய்து அதன் அடிப்படையில் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்ற வகையில் விசாரணை எடுத்து செல்லப்படுகிறது. காடா பாபா தற்போது தலைமறைவாகிவிட்டார். அவரைப் பிடித்து விசாரணை நடத்தினால் மேலும் பல உண்மைகள் வெளிவரும் என்கின்றனர் டெல்லி போலீசார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close