ரயில் பயணத்தில் டிஜிட்டல் ஆதார், டிரைவிங் லைசென்சை பயன்படுத்தலாம்: ரயில்வே

  சுஜாதா   | Last Modified : 06 Jul, 2018 06:08 am
railways-to-accept-digital-aadhaar-driving-licence-from-digilocker

இனி ரயில் பயணத்தின் போது டிக்கெட் பரிசோதகரிடம்  ஒரிஜினல் ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் காண்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.  டிஜிலாக்கரில் பதிவிறக்கம் செய்த டிஜிட்டல் ஆதார் கார்டு,  டிரைவிங் லைசென்ஸ்சே போதுமானது.              

இது குறித்து ரயில்வே துறை அனைத்து ரயில்வே மண்டல மேலாளர்களுக்கும், முதன்மை வர்த்தக மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தவரிடம் ரயில் பயணத்தின் போது, டிக்கெட் பரிசோதகர் அடையாள அட்டையைக் காண்பிக்கக் கூறினால். இனி, மத்திய அரசின் டிஜிலாக்கரில் இருக்கும் ஆதார் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றைக் காண்பித்தால் ஏற்றுக்கொள்ளப்படும், அவை அங்கீகாரமான அடையாள அட்டையாக ஏற்றுக்கொள்ளப்படும். இது தொடர்பாக அனைத்து மேலாளர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
அதேசமயம், ஓட்டுநர் உரிமம் அல்லது ஆதார் அட்டையை ஒரு பயணி தானாகவே பதிவேற்றம் செய்து அதை அடையாள அட்டையாகக் காண்பித்தால் அது அங்கீகாரமற்ற அடையாள அட்டையாகக் கருதப்படும். டிஜிலாக்கரில் இருந்து மட்டுமே அடையாள அட்டைகள் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close