சுனந்தா புஷ்கர் மரண வழக்கு: சசி தரூருக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஜாமீன்!

  முத்துமாரி   | Last Modified : 07 Jul, 2018 12:44 pm

shashi-tharoor-granted-regular-bail-by-delhi-court

சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் சசி தரூருக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. 

முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி சஷி தரூரின் காதல் மனைவி சுனந்தா புஷ்கரின் மரண வழக்கில், சசி தரூர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அவருக்கு டெல்லி போலீசார் நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பியுள்ளனர். விசாரணையின் போது கைது செய்யப்படலாம் என்று கருதி,  சசி தரூர் முன் ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி டெல்லி அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அவர் வெளிநாட்டுக்கு செல்லக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இந்த நிலையில், அமர்வு நீதிமன்றம் ஜாமீன் அளித்ததை தொடர்ந்து ஜாமீன் கோரி டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இன்று ஆஜரான அவருக்கு பட்டியாலா நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close