ராகுல் காந்தி- இயக்குநர் பா.ரஞ்சித் சந்திப்பு

  Newstm Desk   | Last Modified : 11 Jul, 2018 11:27 am

rahul-gandhi-met-director-pa-ranjith

இயக்குநர் பா.ரஞ்சித்தை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

தொடர்ந்து அரசியல் ரீதியான படங்களை இயக்கி வரும் பா.ரஞ்சித் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துள்ளார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

இதுகுறித்து பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, "மெட்ராஸ், கபாலி, காலா போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் பா. ரஞ்சித் மற்றும் நடிகர் கலையரசன் ஆகியோரை சந்தித்தேன். நாங்கள் அரசியல், சினிமா மற்றும் சமூகம் பற்றி பேசினோம். அவர்களுடனான உரையாடல் மகிழ்ச்சியளிக்கிது. இது போன்ற சந்திப்புகள் தொடரும் என எதிர்பார்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

Newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close