பேரறிவாளன் விடுதலையில் எந்த ஆட்சேபணையும் இல்லை: ராகுல் கூறியதாக ரஞ்சித் தகவல்

  Newstm Desk   | Last Modified : 11 Jul, 2018 11:54 am

rahul-gandhi-has-no-issue-in-perarivalan-s-release-says-pa-ranjith

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் விடுதலையாவதில் எந்த ஆட்சேபணைமும் இல்லை என ராகுல் தெரிவித்ததாக பா.ரஞ்சித் கூறியுள்ளார். 

அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை நேற்று இயக்குநர் பா.ரஞ்சித் சந்தித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் ரஞ்சித்துடன் அரசியல், சினிமா, சமூகம் குறித்து பேசியதாக ராகுல் தெரிவித்தார். 

இந்நிலையில், ராஜீவ் காந்தி மரண வழக்கில் கைதாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் விடுதலையாவதற்கு தங்கள் குடும்பம் தடையாக இருக்காது என்றும் தங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்றும் ராகுல் காந்தி தெரிவித்ததாக பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close