நிபாவை தொடர்ந்து கேரளாவை அச்சுறுத்தும் கொடிய வைரஸ்

  ஐஸ்வர்யா   | Last Modified : 24 Jul, 2018 10:13 pm

kerala-toddler-did-not-succumb-to-shigella-hospital-confirms

கேரளாவை மிரட்டிய நிபா வைரஸை தொடர்ந்து தற்போது ஷிகெல்லா என்ற பாக்டீரியா பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவில் கடந்த மே மாதம் நிபா வைரஸினால் சுமார் 17 பேர் உயிரிழந்தனர். வெளவால்களின் கழிவுகள் மற்றும் எச்சத்திலிருந்து நிபா வைரஸ்கள் உருவாவதாகவும், இதற்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு ஒருவழியாக கடந்த மாதம் நிபாவின் பாதிப்புகள் கட்டுப்படுத்தப்பட்டன.  

இந்நிலையில் தற்போது கேரளாவில் ஷிகெல்லா எனும் பாக்டீரியாவால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை கடந்த மாதத்தில் மட்டும் 2 வயது குழந்தை உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஷிகெல்லா பாக்டீரியா தூய்மையற்ற உணவு, அசுத்தமான நீர் ஆகியவற்றின் மூலமாக பரவுகிறது. இது ஒரு தொற்றுநோய் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பாக்டீரிய பாதிப்பு இருந்தால் நீண்டநாள் காய்ச்சல், கடுமையான வயிற்றுவலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மழைக்காலம் தொடங்கியதால் இந்த பாக்டீரியா வேகமாக பரவ தொடங்கியுள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close