கர்நாடக முதல்வர் கேரள மாநிலத்துக்கு 10 கோடி ரூபாய் நிதியுதவி 

  சுஜாதா   | Last Modified : 10 Aug, 2018 10:37 am
karnataka-cm-had-vowed-to-give-rs-10-crores-for-kerala-relief

கேரளா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இடுக்கி, மலப்புரம், கண்ணூர்,  வயநாடு ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக இதுவரை 22 பேர் பலியாகியுள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கர்நாடக முதல்வர் குமாரசாமி மழை வெள்ள நிவாரணங்களுக்காக அம்மாநிலத்துக்கு ரூ.10 கோடி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், கன மழை காரணமாக பலியானவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close