சாதி ரீதியிலான இட ஒதுக்கீடு நிச்சயம் இருக்கும்: மோடி

  Newstm Desk   | Last Modified : 12 Aug, 2018 03:11 pm
reservation-is-here-to-stay-modi

அம்பேத்கரின் கனவு நிறைவேறும் வரை இட ஒதுக்கீடு நிச்சயம் இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் ஆங்கில ஊடகத்துக்கு பிரதமர் மோடி பேட்டியளித்திருந்தார். அப்போது அவரிடம் சாதி ரீதியிலான இட ஒதுக்கீட்டில் அவரது நிலைப்பாடு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு, "அம்பேத்கரின் கனவுகள் இன்னும் முழுமையடைவில்லை. அவரது கனவுகளை நிறைவேற்றுவது நமது கடமை. அவை எல்லாம் நடக்க இட ஒதுக்கீடு முக்கியம். அதுவரையில் இட ஒதுக்கீடு அமலில் தான் இருக்கும். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை. அவரின் கனவுகள் தான் நமது நாட்டின் பலம். எனவே அதனை நிறைவேற்ற உறுதி எடுப்போம். 

சிலர் பா.ஜ.க இட ஒதுக்கீட்டை ரத்து செய்து விடும் என்று எதிர்பார்கிறார்கள். சில ஊடகங்களும் இதனை பெரிய விஷயமாக்கி விடுகின்றன. அவர்கள்  தான் அம்பேத்கரின் கனவுகளை உடைப்பவர்கள். அவர்கள் சிலசமூகத்தினரிடம் அவநம்பிக்கையை விதைக்க முயற்சிக்கிறார்கள். மக்கள் புத்திசாலிகள். அவர்களின் பேச்சை நம்ப மாட்டார்கள்.  எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓ.பி.சி போன்ற பிரிவுகளில் இருந்து அதிகப்படியான  எம்.பி, எம்.எல்.ஏ க்கள் கொண்ட கட்சி பா.ஜ.க தான்” என்றார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close