பிளாஸ்டிக் கொடிகளை பயன்படுத்த கூடாது: உள்துறை அமைச்சகம் 

  சுஜாதா   | Last Modified : 14 Aug, 2018 09:46 am
no-plastic-flags-please-home-ministry

நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் பிளாஸ்டிக்கில் ஆன தேசிய கொடிகளைப் பயன்படுத்த வேண்டாம் என உள்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்தியாவின் 72-வது சுதந்திர தினத்தையொட்டி, "இந்தியாவின் கொடி விதிமுறை- 2002", தேசிய கவுரவத்திற்கு அவமதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் சட்டம்-1971” ஆகியவற்றின் அடிப்படையில்  மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியீட்டுள்ளது. அதன்படி முக்கியமான தேசிய,  கலாச்சார, விளையாட்டு விழாக்களின் போது  பொதுமக்கள்  காகிதங்களால் செய்யப்பட்ட கொடிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. விழா முடிந்த பின் அந்தக் காகிதக் கொடிகளைக் கிழித்தெறியவோ, நிலத்தில் வீசவோ கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் பிளாஸ்டிக்கில் ஆன தேசிய கொடிகளைப் பயன்படுத்த வேண்டாம் என உள்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close