பாகிஸ்தானை பதற வைத்த வாஜ்பாய்... ’ஒளிரும்’ சரித்திரங்கள்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 16 Aug, 2018 09:16 pm
vajpayee-s-blinking-stories

ஆறு வெவ்வேறு தொகுதிகளிலிருந்து 7 முறை மக்களவைக்கும் 3 முறை மாநிலங்களவையில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 3 முறை இந்தியாவின் பிரதமராக பதவியேற்றவர். இந்தியாவின் தவிர்க்க முடியாத அரசியல் தலைவர் வாஜ்பாய். ’இந்தியா ஒளிர்கிறது’ என உரக்க முழங்கியவரின் மூச்சுக்காற்று காற்றில் கரைந்து விட்டது.  

இன்று இந்தியாவில் பாஜக ஆட்சி செய்கிறதென்றால் அதற்கு அடித்தளமிட்டவர் வாய்பாய். இருமுறை பிரதமரானபோதும் சோதனைகளால் சூழப்பட்டார். 1999 முதல் 2004 வரையிலான பிஜேபி ஆட்சியில் இந்தியாவுக்கு எழுச்சியூட்டினார். காங்கிரஸ் அல்லாத ஒரு பிரதமர் 5 ஆண்டுகள் ஆட்சிப் பீடத்தில் இருந்தது வாஜ்பாய் மட்டுமே. 

அவருக்கு பாரத ரத்னா கிடைத்த போதுகூட அவரது ஒரு புகைப்படம் மட்டும் வெளியானது. அதிலும் முகம் தெளிவாக தெரியவில்லை. அதைத்தாண்டி எந்தப் புகைப்படமும் வெளியாகவில்லை. 9 ஆண்டுகளாக வாஜ்பாய் முகம் மக்கள் கண்ணில் படவே இல்லை. பாஜகவின் பிரசார விளம்பரங்களிலும் சிறியதாகவோ அல்லது சில நேரங்களில் பெயரோடே சுருங்கிப்போனது வாஜ்பாய் என்னும் மகத்தான மனிதரின் முகம். 

2009-க்கு முன்பு வரை ஓரளவு செயல்பாட்டில் இருந்த வாஜ்பாயின் உடல்நிலை 2009-க்குப் பிறகு, சற்று தளர்ந்துபோனது. கடந்த 20 ஆண்டுகளில் பத்து முறை அவரது உடலை ஆபரேசன்கள் ஏற்றுக்கொண்டுள்ளது. மண்ணில் மறைந்தாலும் அவரது சாதனைகள் என்று இந்தியாவில் ஒளிரும்.  நாட்டின் மிகக்குறைந்த காலமே பிரதமர் வகித்தாலும், இந்தியாவை அணுஆயுத நாடாக உருவாக்கி உலக நாடுகளை இந்தியாவின் பக்கம் திருப்பியவர். 

கார்கில் போரில் வெற்றி கண்டு பாகிஸ்தானை கதற வைத்தவர். இந்த தோல்வியை பாகிஸ்தானால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தக் கூட திட்டமிட்டது. இதை அறிந்த அமெரிக்கா பாகிஸ்தானையும் இந்தியாவையும் அமைதிபடுத்த முயற்சித்தது. அப்போது பேசிய வாஜ்பாய், பாகிஸ்தான் விரும்பினால் இந்தியா மீது அணு ஆயுத தாக்குதலை நடத்தட்டும். அதன்பிறகு, உலக வரைபடத்தில் பாகிஸ்தான் என்ற ஒரு நாடே இருக்காது என்று உறுதியுடன் கூறினார். இதனால், பயந்து பின்வாங்கியது பாகிஸ்தான்.

தன்னுடைய துணிச்சலான ராணுவ நடவடிக்கை மூலம் பாகிஸ்தானை அலறவிட்டாலும், பாகிஸ்தானுடன் நல்லுறவே பேண பெரிதும் விரும்பினார். இந்தியா பாகிஸ்தான் இடையே பேருந்து சேவையை அறிமுகப்படுத்தினார். பொக்ரான் அணு சோதனைக்கு முன்னின்றவர். பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு வித்திட்டவர். தங்க நாற்கரச்சாலை இன்றும் அவர் பெயர் சொல்லும் திட்டங்களில் ஒன்றாக திகழ்கிறது. இனி வாஜ்பாய் கனவுகண்ட இந்தியா ஒளிரும்...

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close