கேரளாவுக்கு குவியும் நிதியுதவி...குஜராத், மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநில அரசுகள் உதவி!

  முத்துமாரி   | Last Modified : 18 Aug, 2018 03:50 pm

gujarat-maharastra-helps-to-kerala

வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு குஜராத், மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநில அரசுகள் உதவியுள்ளன. 

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு பல்வேறு மாநில அரசுகள், பொதுமக்கள் உதவி வரும் நிலையில், மகாராஷ்டிரா அரசு சார்பில் ரூ.20 கோடி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் அறிவித்துள்ளார். அதேபோன்று குஜராத் அரசு சார்பில் ரூ.10 கோடியும், ஜார்கண்ட் மாநில சார்பில் ரூ. 5 கோடியும் நிவாரண உதவியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக டெல்லி அரசு சார்பில் கேரளாவுக்கு ரூ.10 கோடி, அதேபோன்று தமிழகம், பஞ்சாப், ஆந்திர மாநிலங்கள் தலா ரூ.10 கோடி, தெலங்கானா ரூ.25 கோடி, பீகார், ஒடிசா, மாநிலங்கள் தலா ரூ.5 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளது. 

மத்திய அரசு சார்பில் முதற்கட்டமாக ரூ.100 கோடி நிவாரண நிதியை அறிவித்தார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். இதையடுத்து பிரதமர் மோடி ரூ.500 கோடியும், அதுதவிர கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி  பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close