சி.பி.எஸ்.இ.  பாடப்புத்தகத்தில்  நடிகர், நடிகைகள் புகைப்படங்கள்: சி.பி.எஸ்.இ.யின் தரம் என்ன ஆனது? நீதிபதி கேள்வி 

  சுஜாதா   | Last Modified : 21 Aug, 2018 06:19 am
high-court-judge-question-to-cbse

சி.பி.எஸ்.இ. 2-ம் வகுப்பு பொதுஅறிவு பாடத்தில் ரஜினிகாந்த், ஜாக்கிசான், அமீர்கான், ஷாருக்கான், ஐஸ்வர்யாராய், கத்ரீனா கைப் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. சி.பி.எஸ்.இ.யின் தரம் என்ன ஆனது? என்று ஐகோர்ட்டு நீதிபதி  கேள்வி எழுப்பியுள்ளார். 

வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன், ‘சி.பி.எஸ்.இ. உட்பட அனைத்து பள்ளிகளும் 2-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது. இதுதொடர்பான உத்தரவை மத்திய அரசு பிறப்பிக்கவேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டிருந்தார். இதனை மத்திய அரசும் வழிமொழிந்தது.   

இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி மத்திய அரசு இந்த உத்தரவை காகித வடிவில் வைத்திருக்காமல், தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று கூறினார். மேலும், "மராட்டியம், தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களில் புத்தக சுமையை குறைப்பது தொடர்பான மாதிரி திட்டத்தை உருவாக்கியுள்ளதை போல, தமிழகத்தில் அதுபோன்ற திட்டத்தை ஏன் உருவாக்கக்கூடாது?" என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

பின்னர், "2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கும் பள்ளிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து, 3 வாரங்களுக்குள் தேசிய மற்றும் மாநில மொழி பத்திரிகைகளில் சி.பி.எஸ்.இ. விளம்பரம் செய்யவேண்டும்" என்று நீதிபதி உத்தரவிட்டார்.

அப்போது இந்த வழக்கினை தாக்கல் செய்த வக்கீல் எம்.புருஷோத்தமன், "சி.பி.எஸ்.இ. 2-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பொதுஅறிவு பாடத்தில் ரஜினிகாந்த், ஜாக்கிசான், அமீர்கான், ஷாருக்கான், ஐஸ்வர்யாராய், கத்ரீனா கைப் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. குழந்தைகள் இவர்களை ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்?. இதில் என்ன பொதுஅறிவு உள்ளது?" என்று வாதிட்டார்.

இதனை தொடர்ந்து நீதிபதி என்.கிருபாகரன், நாட்டிலேயே முதன்மையான கல்வி வாரியமாக விளங்கும் சி.பி.எஸ்.இ.யின் தரம் என்ன ஆனது?’ என்று கேள்வி எழுப்பினார்.  இந்த வழக்கு  இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close