பத்திரிக்கையாளர் சந்திப்பில் கர்நாடக அமைச்சரை தாக்கிய நிர்மலா சீதாராமன்

  Newstm Desk   | Last Modified : 25 Aug, 2018 04:55 pm
nirmala-seetharaman-snaps-at-karnataka-minister

கர்நாடக மாநிலம், குடகு மாவட்டத்தின் வெள்ள பாதிப்பு குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர், நிர்மலா சீதாராமன் மேற்பார்வையிடச் சென்றிருந்தார். கர்நாடகாவில் பத்திரிகையாளர் சந்திப்பின்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. 

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட நிர்மலா சீதாராமனை கர்நாடக சுற்றுலாத்துறை அமைச்சர் சா.ரா.மகேஷ்  நேரமின்மை காரணமாக வெளியேற சொன்னார். இதனால் ஆத்திரமடைந்த நிர்மலா சீதாராமன், பத்திரிகையாளர் சந்திப்பிலேயே, "நான் எனக்குக் கொடுக்கப்பட்ட நிகழ்வு அட்டவணையை தான் பின்பற்றி வருகிறேன். நான் ஒரு மத்திய அமைச்சர். மாவட்ட பொறுப்பில் உள்ள அமைச்சரின் கட்டளைகளை பின்பற்ற வேண்டியுள்ளது. நம்பவே முடியவில்லை" என்று அமைச்சர் சா.ரா.மகேஷை கடுமையாக சொற்களால் தாக்கினார்.

அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர், இவையெல்லாமே கேமராக்களில் ரிக்கார்டிங் செய்யப்படுகிறது என்று கூறியபோது, ``ரெக்கார்ட் பண்றதுனா பண்ணிக்கோங்க. உங்களுக்கு என்னவெல்லாம் ரெக்கார்ட் செய்ய வேண்டுமோ பண்ணிக்கலாம்" என்று கூறியதனால் பத்திரிகையாளர்  கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close