ஜியோ போனின் அடுத்த அவதாரம் இரவு 12 மணி முதல்...

  ஐஸ்வர்யா   | Last Modified : 29 Aug, 2018 07:37 pm

jio-phone-2-second-flash-sale-at-night-12

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ போன் 2-ன் இரண்டாவது விற்பனை இன்று இரவு 12 மணி முதல் தொடங்கவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கு ஜியோ போன் 2 என பெயரிடப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சார்பில் ரூ 1, 500 கட்டணத்தில் சில சலுகைகளுடன் ஜியோ போன் 2வை வெளியிட்டது. இதன் முதல் கட்ட விற்பனை ஆகஸ்ட் 15 ஆம் தேதி தொடங்கியது. விற்பனை தொடங்கிய சில நிமிடங்களில் அனைத்து போன்களும் விற்று தீர்ந்ததாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் ஜியோ போன் 2 -ன் இரண்டாவது விற்பனை இன்று இரவு 12 மணிக்கு தொடங்கவுள்ளது. 2.4 இன்ச் டிஸ்ப்ளே  கொண்ட ஜியோ போனின் இரண்டாவது அவதாரத்தில் வாட்ஸ் அப், பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடதக்கது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close