கேரள நிவாரண நிதி  ரூ.1027 கோடியாக உயர்வு

  சுஜாதா   | Last Modified : 04 Oct, 2018 12:03 pm

kerala-relief-fund-reaches-rs-1027-crore

கேரளா வெள்ள நிவாரணத்திற்கு உலகெங்கிலும் இருந்து வந்த நிவாரண நிதியானது 738 கோடியிலிருந்து 1027 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

கேரளாவில் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இரு வாரங்களாக பெய்த கனமழை காரணமாக மாநிலமே உருக்குலைந்து போயுள்ளது. பல லட்சகணக்கான மக்கள் தங்களது வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். சுமார் 400க்கும் மேற்பட்டோர் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். 


சில தினங்களாக இயல்பு நிலைக்கு திரும்பும் கேரளாவுக்கு பல மாநிலங்கள், நிறுவனங்கள், பொதுமக்கள் என பலமுனை நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. கேரள மக்களுக்கு உதவ பல்வேறு அரசியல் பிரமுகர்கள், திரையுல பிரபலங்கள், பிற மாநில அரசுக்கள், பொதுமக்கள் என பலர் தங்களால் இயன்ற நிதி உதவியை செலுத்தி வருகின்றனர். பலரது உதவிகளின் மூலம் லட்சகணக்கான மக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.  

நேற்று முன்தினம் கேரளாவில் நடைபெற்ற சட்டசபை சிறப்பு கூட்டத் தொடரில் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகஸ்ட் 28-ந் தேதி வரை கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்திற்காக உலகமெங்கிலும் இருந்து 738 கோடி ரூபாய் நிவாரண நிதி வந்திருப்பதாக  கூறியிருந்தார். இந்நிலையில் அந்த நிவாரண நிதியானது தற்பொழுது வரை 1027 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.