மானசரோவர் யாத்திரையில் ராகுல் அசைவ உணவு சாப்பிட்டாரா?

  Newstm Desk   | Last Modified : 05 Sep, 2018 05:11 pm

rahul-ordered-pure-veg-items-from-the-menu-soup-shop-s-clarification-on-mansarovar-yatra-issue

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கைலாஷ் யாத்திரிரை சென்றிருந்த போது அசைவ உணவு சாப்பிட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் ஹோட்டல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 

கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரைக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்றிருந்தார். இதற்காக நேபாளத்தில் இரவு தங்கிய அவர், தனது நண்பர்களுடன் உணவு சாப்பிட்டார். அப்போது அவர் அசைவ உணவு வகைகளையும், சிக்கன் சூப்பும் சாப்பிட்டதாக உள்ளூர் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டது. 

இதுபற்றி டெல்லி பா.ஜ.க தலைவர் மனோஜ் திவாரி கூறும் போது, “ராகுல்காந்தி புனித யாத்திரை செல்லும் போது அசைவ உணவை சாப்பிட்டதன் மூலம் இந்துக்களின் உணர்வை புண்படுத்தி விட்டார். அவர் அசைவம் சாப்பிட்டதில் தவறு இல்லை. புனித யாத்திரை சென்றபோது அசைவம் சாப்பிட்டது கண்டிக்கத்தக்கது” என்றார்.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதை அடுத்து வூட்டு ஹோட்டல் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், ராகுல்காந்தி சைவ உணவுகளையே சாப்பிட்டதாக தெரிவித்துள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close