மல்லையாவை அனுப்பியதே ஜெட்லிதான்... - பா.ஜ.க-வில் கலக குரல்!

  Newstm Desk   | Last Modified : 13 Sep, 2018 04:21 pm
mallya-told-fm-in-central-hall-of-parliament-subramanian-swamy

அருண் ஜெட்லியிடம் சொல்லிவிட்டுதான் வெளிநாடு வந்தேன் என லண்டனில் தஞ்சம் அடைந்தள்ள விஜய் மல்லையா வெளியிட்டுள்ள தகவல் இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை ஜெட்லி மறுத்தாலும் பா.ஜ.க-வின் சுப்ரமணியசாமி இது உண்மை என்று ட்வீட் செய்திருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடிரூபாய் கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டில் பதுங்கியிருக்கிறார் விஜய் மல்லையா. அவரை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், அந்த நடவடிக்கை சில ஆண்டுகளாக இழுத்துக்கொண்டே செல்கிறது. அவரும் அங்கு பொது நிகழ்ச்சிகள், கிரிக்கெட், டென்னிஸ் என்று விளையாட்டுக்களை கண்டு ரசித்து பொழுதுபோக்கி வருகிறார்.

இந்த நிலையில் லண்டனில் நிருபர்களிடம் பேசிய விஜய் மல்லையா, வெளிநாட்டுக்கு செல்வதற்கு முன்பு நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்ததாகவும், வெளிநாடுக்கு செல்ல இருப்பதையும் பணத்தை திரும்ப வழங்கிவிடுவதாகவும் தெரிவித்ததாக கூறினார். மேலும்,  “நாட்டை விட்டு வெளியேறும் முன் நிதி மந்திரி அருண் ஜெட்லியை பல முறை சந்தித்து, நிலைமையை சரிசெய்ய முயற்சித்தேன்” என கூறியிருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த அருண் ஜெட்லி, 2014-ம் ஆண்டு  முதல் தாம் விஜய் மல்லையாவை சந்திக்க அனுமதி வழங்கவில்லை என கூறியிருந்தார். அதேநேரத்தில் மாநிலங்கள் அவை உறுப்பினர் என்ற வகையில் மல்லையவை தெரியும் என்றும் தெரிவித்திருந்தார். மல்லையாவோ, தன்னுடைய சந்திப்பு அலுவல் ரீதியானது இல்லை... நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலேயே சந்தித்தேன் என்றார்.

இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்புரமணிய சாமி தனது ட்விட்டர் பக்கத்தில், 2015-ம் ஆண்டு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வைத்து விஜய் மல்லையா, அருண் ஜெட்லியை சந்தித்து தாம் லண்டனுக்கு தப்புவது குறித்து தெரிவித்தார். இரண்டாவது உண்மை என்னவென்றால், விஜய் மல்லையா மீது இருந்த லுக் அவுட் நோட்டீஸ் தளர்க்கப்பட்டு அறிவிக்க வேண்டும் என்று மாற்றப்பட்டது. மேலும் அவர் செல்லும்போது 54 பெட்டிகளும் பரிசோதனை செய்யப்பட்டு பத்திரமாக அனுப்பப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

2014-ம் ஆண்டுக்குப் பிறகு விஜய் மல்லையவை தாம் சந்திக்கவில்லை என அருண் ஜெட்லி கூறியிருந்த நிலையில், அருண் ஜெட்லியிடம் லண்டனுக்கு தப்புவது குறித்து சொல்லிவிட்டுதான் சென்றார் என பாஜக மூத்த தலைவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close