காங்கிரஸ் அறிக்கை தயாரிப்பு குழு தலைவராக ப.சிதம்பரம் நியமனம்

  Newstm Desk   | Last Modified : 16 Sep, 2018 11:22 am
p-chidambaram-appointed-as-chairman-of-congress-manifesto-panel

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவராக ப.சிதம்பரம்  நியமிக்கப்பட்டுள்ளார்.

2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பா.ஜ.கவின் வியூகங்களை முறியடிக்கும் வகையில், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

தற்போது கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் தலைவராக முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ளார்.

மேலும் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் ராஜீவ் கவுடா ஆகியோர் அமைப்பாளர்களாகவும், ஏ.கே.அந்தோணி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுபோல் பிரச்சாரக் குழுவின் தலைவராக ஆனந்த் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close