'மோடிகேர்' உலகிலேயே மிகப்பெரிய காப்பீடு திட்டம் துவக்கம்!

  Newstm Desk   | Last Modified : 23 Sep, 2018 08:25 pm
modi-launches-world-s-biggest-healthcare-program

மத்திய அரசின் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா காப்பீட்டுத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார். உலகிலேயே மிகப்பெரிய காப்பீட்டுத் திட்டம் இதுதான் என பிரதமர் தெரிவித்தார். 

50 கோடி இந்திய மக்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க உள்ளதாக மத்திய அரசின் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. அதற்கான வேலைகள் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், இன்று அதிகாரபூர்வமாக பிரதமர் மோடி துவக்கி வைத்தார். ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் உள்ள மொத்த மக்களை விட அதிகமானோருக்கு இந்த காப்பீடுத் திட்டம் உதவும் என பிரதமர் மோடி கூறினார். 

ஏழை எளிய மக்களுக்கு உதவுமாறு இந்த காப்பீடுத் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பாகமாக, 1,50,000 மருத்துவமனைகள் உருவாக்கப்படும் எனவும் தெரிகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close