’மத்தியில் எங்க ஆட்சி...’ மிரட்டும் எடியூரப்பா... கலக்கத்தில் கர்நாடகா!

  பா.பாரதி   | Last Modified : 25 Sep, 2018 06:31 pm
the-politics-of-karnataka-hot-ediyurappa-and-kumarasamy-war


கர்நாடக அரசியலில் தற்போதைய முதல்வர் குமாரசாமிக்கும், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கும் குடுமி பிடி குஸ்தி நடைபெற்று வருகிறது. 
கர்நாடகத்தில் ஓரிரு நாள் முதல்வராக இருந்த பாஜகவின் எடியூரப்பா, பெரும்பான்மை பலம் இல்லாததால் பதவி விலக நேரிட்டது.
பாஜகவுக்கு அடுத்து கூடுதல் இடங்களை பிடித்த காங்கிரஸ் கட்சி, ஆட்சி அமைக்காமல், மூன்றாவது இடத்தில் இருந்த மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு  ஆதரவளித்து குமாரசாமியை  முதல்வர் ஆக்கியுள்ளது.

‘நித்திய கண்டம்... பூரண ஆயுசு..’ என்ற கணக்கிலேயே குமாரசாமியின் ஆட்சி ஓடிக்கொண்டிருக்கிறது. மெஜாரிட்டி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தனக்கு இருந்தும் முதல்வராக நீடிக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில் இருக்கும் எடியூரப்பா, குமாரசாமிக்கு தினம்தோறும் குடைச்சல் கொடுத்து கொண்டே இருக்கிறார். ‘’குமாரசாமி பக்கம் இருந்து 15 முதல் 20 எம்.எல்.ஏ.க்கள் எங்கள் பக்கம்  சாயப்போகிறார்கள்’’ என அடிக்கடி எச்சரிக்கை விடுத்து வருவதால் குமாரசாமி கடுப்பாகி விட்டார்.

அண்மையில் தன் சொந்த ஊரான ஹாசனுக்கு  சென்றிருந்த குமாரசாமி, எடியூரப்பாவை வறுத்து எடுத்து விட்டார். அவரது  பேச்சின் சாராம்சம் இது: ‘’எங்கள் அரசை  கவிழ்க்கப்போவதாக தொடர்ந்து மிரட்டல் விடுத்தால் பிஜேபிக்கு எதிராக புரட்சி செய்யுமாறு மக்களை நான் வலியுறுத்த நேரிடும். கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறிய  வேண்டாம். அரசாங்கம் எனது கையில் இருக்கிறது என்பதை  மறந்து விட வேண்டாம். நான்  என்ன வேண்டுமானாலும் செய்வேன்’’ என்று  குமாரசாமி  பொறிந்து தள்ளி விட்டார். பதிலுக்கு சும்மா இருப்பாரா எடியூரப்பா? குமாரசாமிக்கு எடியூரப்பாவின் பதில் காரமாகவே இருந்தது. ‘’அரசு கஜானாவை கொள்ளை அடித்தது உங்களது குடும்பம். உங்கள் மிரட்டலுக்கு நான் அடி பணிய மாட்டேன். மறந்து விட வேண்டாம். மத்தியில் இருப்பது எங்கள் அரசாங்கம்’’ என்று எடியூரப்பா சுடச்சு பதிலடி கொடுத்துள்ளார்.

இந்த வார்த்தை யுத்தம் இரு தலைவர்களுக்கும் வாடிக்கையாகி விட்டது.  ஜனங்கள் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாத நிலையில், கர்நாடக மீடியாக்களோ, ‘நமக்கு ரெண்டு பேரும் சரியான தீனி போடுறாங்க ‘’என கிண்டல் அடிக்கின்றன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close