பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஒரு உதவியாளர் மட்டுமே: சுப்பிரமணியன் சாமி

  Newstm Desk   | Last Modified : 01 Oct, 2018 09:32 am
imran-khan-is-nothing-but-a-chaprasi-su-swamy

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெறும் உதவியாளர் மட்டுமே என பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி தெரிவித்துள்ளார். மேலும் இஸ்லாமாபாத் தீவிரவாதிகளால் ஆளப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். 

ஐ.நா பொதுச்சபை கூட்டத்தின் இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கலந்து கொண்டார்.  நியூயார்க் நகரில் நடைபெற்ற 73வது அமர்வில் உரையாற்றிய அவர்,  பயங்கரவாதத்தை ஒழிக்க, உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.  அண்டை நாடான பாகிஸ்தான், தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக சுஷ்மா சுவராஜ், குற்றஞ்சாட்டினார். மேலும் பயங்கரவாத அச்சுறுத்தலும், பருவநிலை மாற்றமும், உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக விளங்குகிறது என்றும் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, ராணுவம், ஐ.எஸ்.ஐ மற்றும் தீவிரவாதிகளால் ஆளப்படும் நாடு பாகிஸ்தான் எனவும் அங்கு இம்ரான் கான் வெறும் உதவியாளர் மட்டுமே என்றும் கூறினார். 

மேலும் பாகிஸ்தானை 4 பாகங்களாக பிரிக்க வேண்டும் என்று கூறிய சாமி ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பாகிஸ்தானை பற்றி பேசி சுஷ்மா சுவராஜ் தனது நேரத்தை வீணாக்கி கொண்டார் என்றார். இந்தியா ஒவ்வொரு முறையும் பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டு வைக்கும் போதும் அதனை நினைத்து அந்த நாடு ஒரு வித சுகத்தை அடைகிறது எனவும் அவர் கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close