இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புடின்!

  Newstm Desk   | Last Modified : 04 Oct, 2018 10:45 pm

putin-arrives-in-india-meets-modi

இந்தியா ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான உச்சகட்ட பேச்சுவார்த்தைகளுக்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இன்று தலைநகர்  டெல்லியில் வந்திறங்கினார். 

பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த, ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வந்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையேயான பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த சந்திப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட உள்ளது. டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய அதிபர் புடினை, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வரவேற்றார். 

புடினின் வருகையை தொடர்ந்து, "இந்தியாவுக்கு உங்களை வரவேற்கிறேன், அதிபர் புடின்" என பிரதமர் மோடி ட்வீட் செய்தார். இதைத் தொடர்ந்து. பிரதமர்  மாளிகைக்கு வந்த அதிபர் புடினை மோடி வரவேற்றார். இருவரும்  சிறிது நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இரு நாட்கள் நடைபெறும் இந்த சுற்றுப்பயணத்தில் 20 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் பிரதமர் மோடியும், அதிபர் புடினும் கையெழுத்திடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close