பிரதமர் மோடி - ரஷிய அதிபர் புடின் ஆலோசனை

  Newstm Desk   | Last Modified : 05 Oct, 2018 11:57 am
mmodi-putin-meet

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், ரஷிய அதிபர் விளாடிமீர் புடினும் டெல்லியில் தற்போது ஆலோசனை நடத்தி வருகின்றனர். தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

முன்னதாக , புடின் நேற்று இரவு இந்தியா வந்தார். அவர் இங்கு இரண்டு நாள்களுக்கு தங்கியிருப்பார். மோடி உடனான ஆலோசனைக்கு பிறகு, இரு நாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. ரஷியாவிடம் இருந்து, அதிநவீன ஏவுகணைகளை செலுத்தும் வல்லமை கொண்ட எஸ்-400 டிரையம்ப் போர் உபகரணத்தை இந்தியா வாங்கவுள்ளது. ரூ.40,000 கோடி மதிப்பில் மொத்தம் 5 உபகரணங்கள் வாங்கப்படவுள்ளன.

இதற்கான ஒப்பந்தம், மோடி - புடின் முன்னிலையில் கையெழுத்தாகவுள்ளது. இதேபோல், பாதுகாப்புத்துறை, விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான வேறுசில ஒப்பந்தங்களும் கையெழுத்தாகவுள்ளன.  ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு மோடியும், புடினும், தில்லி ஐடிசி மௌர்யாவில், திறன்வாய்ந்த குழந்தைகளுடன் உரையாட உள்ளனர். அதன் பின்னர், பிற்பகல் 2.30 மணியளவில், ஒப்பந்தங்கள் பரிமாற்றம் மற்றும் செய்தியாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது.

ரஷியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் நாடுகள் மீது வர்த்தக ரீதியாக தடை விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ள போதிலும், எஸ்-400 டிரையம்ப் ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

newstm.in

 


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close