தெலுங்கானா: காங்கிரஸ் தலைமையில் மகா கூட்டணி

  பாரதி கவி   | Last Modified : 09 Oct, 2018 12:00 pm
telangana-grand-alliance-under-congress

தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி தலைமையில் மகா கூட்டணி அமைந்துள்ளது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்ட், தெலுங்கானா ஜனசமிதி கட்சி ஆகியவை அந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த மாநிலத்தில், வரும் டிசம்பர் 7-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆளும் கட்சியாக உள்ள தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியை எதிர்த்துப் போட்டியிட, பிரதான கட்சிகளான காங்கிரசும், பாஜகவும் வியூகங்களை வகுத்து வருகின்றன. பாஜக தனித்துப் போட்டியிடுகிறது. அதே சமயம், காங்கிரஸ் மெகா கூட்டணியை அமைத்துள்ளது.

குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் இந்தக் கூட்டணி செயல்படும் என்றும், அதுதொடர்பான கொள்கைகள் வகுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டப்பேரவையில் மொத்தம் 119 இடங்கள் உள்ளன. இந்நிலையில், தொகுதிப் பங்கீடு தொடர்பாகவும் கூட்டணி கட்சிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சி 80 இடங்களில் போட்டியிடவும், மீதமுள்ள தொகுதிகளை பிற கட்சிகள் பிரித்துக் கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளதாக, அந்தக் கூட்டணியில் உள்ள மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close