இந்திரதனுஷ் தடுப்பூசி இயக்கம் 

  சுஜாதா   | Last Modified : 25 Oct, 2018 07:36 am
indradhanush-health-mission

இந்திரதனுஷ் தீவிர தடுப்பூசி இயக்கத்தை 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி பிரதமர் திரு நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.  குழந்தைகள் மற்றும் கருவுற்ற தாய்மார்களுக்கு குறிப்பாக தடுப்பூசி வழங்கப்படாத தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகள் மற்றும் கருவுற்ற தாய்மார்கள் நோய் தொற்றிலிருந்து  தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இந்தத் தடுப்பூசி வழங்கும் இயக்கம் துவங்கப்பட்டது. 

இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் 90 சதவீதம்  பேருக்குத் தடுப்பூசி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. முதற்கட்டமாக நாடுமுழுவதும் 190 மாவட்டங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் இந்தத் தீவிர இந்திர தனுஷ் தடுப்பூசி இயக்கம் செயல்படுத்தப்பட்டது.  இதில் 75 மாவட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு எட்டப்படாமல் 50 சதவீதத்திற்கும் குறைவான குழந்தைகள் மற்றும் கருவுற்ற தாய்மார்களுக்கு  தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாகப்பட்டினம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் 50 சதவீதத்திற்கும் குறைவான அளவே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  நாகப்பட்டினத்தில் 39 சதவீதம், தூத்துக்குடியில் 47.7 சதவீதம், திருநெல்வேலியில் 49.8 சதவீதம் பேருக்கு மட்டும் தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது.  இந்த மாவட்டங்களில் இம்மாதம் 22 ஆம் தேதியிலிருந்து, தீவிர இந்திர தனுஷ் தடுப்பூசி இயக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இதன்மூலம், தமிழகத்தில் மூன்று மாவட்டங்கள் உட்பட இலக்கை எட்டாத 75 மாவட்டங்களிலும் உள்ள தடுப்பூசி அளிக்கப்படாத குழந்தைகள் மற்றும் கருவுற்ற தாய்மார்களுக்கு தடுப்பூசி அளிக்க வழி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close