புதிய வேளாண் ஏற்றுமதி கொள்கை விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும்: மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு

  சுஜாதா   | Last Modified : 26 Oct, 2018 01:14 am
new-agri-export-policy-to-double-farmer-s-income-suresh-prabhu

விரைவில் தொடங்கப்படவுள்ள புதிய வேளாண் ஏற்றுமதிக் கொள்கையின் கீழ், வேளாண் தொடர்பான மண்டலங்களை மத்திய அரசு தயார்செய்து வருகிறது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.  

இது குறித்து அவர் கூறியதாவது: இந்தியா, ஏறத்தாழ 600 மில்லியன் டன் வேளாண் பொருட்களை உற்பத்தி செய்கிறது.  விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கி, உணவு பொருட்களில் ஏற்படும் சேதாரத்தை குறைப்பதே இதன் நோக்கமாகும்.  உள்நாட்டு உத்திகளைத் தவிர்த்து, உலகிற்கு வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்வதிலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது.  மேலும், இயற்கை உணவுச்  சந்தையின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியமும் உள்ளது என்று அமைச்சர் கூறியுள்ளார்.  

மேலும், நாடுமுழுவதும் உள்ள பல்வேறு பருவநிலை கொண்ட மண்டலங்கள் இருப்பதால், அனைத்து விதமான இயற்கை வேளாண் பொருட்களை உற்பத்தி செய்யும் திறனை இந்தியா கொண்டுள்ளது.  இதைத் தவிர, இயற்கை விவசாயம் இந்தியா  மரபில் ஏற்கனவே உள்ளதால், நாம் இதனை மேற்கொள்வது சுலபமாக இருக்கும்.  உள்நாடு மற்றும் ஏற்றுமதி சந்தைகளில் தொடர்ந்து வளர்ந்து வரும் தேவையை இயற்கை வேளாண் உற்பத்தியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதிகளவில் இயற்கை வேளாண் உற்பத்தியாளர்கள் கொண்ட நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.  உலகில் அதிகளவில் இயற்கை விவசாய நிலங்கள் கொண்ட பட்டியலில் இந்தியா ஒன்பதாவது இடத்தை வகிக்கிறது.  ஐரோப்பிய ஆணையம் மற்றும் அமெரிக்க வேளாண் துறை ஏற்பாடு செய்த தேசிய இயற்கை வேளாண் உற்பத்தித் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.  இதனால், இந்தியாவின் இயற்கை வேளாண் பொருட்களின் சான்றிதழ்களை இறக்குமதி செய்யும் நாடுகள் ஏற்றுக் கொள்கின்றன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close