சர்வதேச ஆர்ய மகாசம்மேளன் 2018 – குடியரசுத் தலைவர் துவக்கி வைத்தார்.

  சுஜாதா   | Last Modified : 26 Oct, 2018 01:25 am
ram-nath-kovind-inaugurates-international-arya-mahasammelan-2018

டெல்லியில்  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சர்வதேச ஆர்ய மகாசம்மேளன்-2018ஐ துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், 19-ஆவது நூற்றாண்டில் நமது கலாச்சாரத்தையும், நம்பிக்கைகளையும் மேற்கத்திய கலாச்சாரத்தை விட குறைந்தது என்று நாம் நம்பினோம்.  ஆனால், சுவாமி தயானந்த சரஸ்வதி மறுமலர்ச்சி மற்றும் சுய பெருமைக்கான வழியை நமக்கு காண்பித்தார். அவர், சமூக மற்றும் ஆன்மீக மாற்றங்களுக்கான  துணிச்சலான போர் வீரராக இருந்தார். பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் தீண்டாமையை ஒழிப்பதற்காக கல்வி மற்றும் சமூக மாற்றங்களுக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவர் பின்பற்றிய வழிமுறைகள் இந்திய சமூகம் மற்றும் மொத்த உலகிற்கும் தற்போது வரை உகந்ததாக உள்ளது. உலகம் முழுவதும் 10 ஆயிரம் ஆர்ய சமாஜ் அமைப்புகள்  நலன்சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று குடியரசுத் தலைவர் கூறினார்.  

மேலும், ஆர்ய சமாஜ்ஜானது, நெறிமுறைகளை மையமாக கொண்ட நவீன கல்வி முறையை ஊக்குவிப்பதில் சிறந்த பங்களிப்பை வழங்கி வருகிறது.  சமூகத்தின் அனைத்து பிரிவினர்களின் முன்னேற்றத்திற்காக, முக்கியமாக பெண்கள் மற்றும் நலிந்தோர் நலனுக்காகவும் ஆர்ய சமாஜ் தனது பங்களிப்பை வழங்கி வருகிறது.  நாடுமுழுவதும் இந்த அமைப்பு பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை நிறுவி உள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறினார்.

2024 ஆம் ஆண்டு நாம் சுவாமி தயானந்த சரஸ்வதியின் 200 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடுவோம்.  2025-ஆம் ஆண்டில் நாம் ஆர்ய சமாஜின் 150 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடுவோம்.  சமூகத்தில் சாதி மற்றும் பிரிவு சார்ந்த பாகுபாட்டை ஒழிப்பதற்காக சுவாமி தயானந்த சரஸ்வதி,  அனைவரும் தன்னளவில் சிறந்து விளங்க வேண்டும் என்ற எண்ணத்தை ஊக்குவித்தார்.  சுவாமி தயானந்த சரஸ்வதியின் வழிமுறைகளை முன்னெடுத்துச் செல்வது நமது கடமையாகும் என்று குடியரசுத் தலைவர் கூறினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close