வல்லபாய் படேல் சிலை: வாஷிங்டன் போஸ்ட் பாராட்டு

  டேவிட்   | Last Modified : 31 Oct, 2018 12:35 am
washington-post-about-sardar-patel-statue

குஜராத்தில் இன்று (அக்.31) பிரதமர் நரேந்திர மோடி திறக்க உள்ள வல்லபாய் படேல் சிலை, அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையை விட நான்கு மடங்கு உயரமானது என அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் தனது பாராட்டை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், இந்தியாவில் நாளை திறந்து வைக்கப்படவுள்ள “ஒற்றுமைக்கான சிலை” சுதந்திர போராட்ட வீரரும், நாட்டின் முதல் உள்துறை அமைச்சரும், சமஸ்தானங்களை ஒன்றிணைத்து இந்தியா என்ற நாட்டை உருவாக்கியவருமான சர்தார் வல்லபாய் படேலை கவுரவிக்கும் வகையில் அந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், இந்த சிலையின் உயரம் 597 அடி. அமெரிக்காவின் சுதந்திரா தேவி சிலையை விட நான்கு மடங்கு உயரமானது என்றும், உலகளவில் உயரமான சிலையாக கருதப்படும் சீனாவின் புத்தர் சிலையை விட கூடுதலாக, 177 அடி உயரம் கொண்டது என்றும்  வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் கூறப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close