நாளை முதல் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!

  ஐஸ்வர்யா   | Last Modified : 31 Oct, 2018 07:26 pm
neet-ug-2019-registrations-begins-tomorrow

2019-ல் நடைபெறவுள்ள நீட் தேர்வுகள் வரும் 2019 மே 5-ம் தேதி தொடங்குகின்றன. இதற்கு நாளை தேதி முதல் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு படிக்கும் அல்லது படித்து முடித்த மாணவர்கள் நாளை முதல் www.nta.ac.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். 

மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்/பி.டி.எஸ் போன்ற படிப்புகளில் சேர்வதற்காக நீட் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதுவரை சி.பி.எஸ்.சி நடத்திவந்த நீட் தேர்வை இனிவரும் காலங்களில் என்.டி.ஏ எனப்படும் தேசிய தேர்வு நிறுவனம் நடத்தவுள்ளது. ஆண்டுதோறும் ஒரே ஒரு கட்டமாக நடந்த நீட் தேர்வு இந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 2 கட்டங்களாக கம்ப்யூட்டர் மூலம் நடத்த மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

அவ்வாறு ஆண்டுக்கு 2 நீட் தேர்வுகளை நடத்தினால் அது மாணவர்களுக்கு கூடுதல் நெருக்கடியை அளிக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கருதுகிறது. வரவிருக்கும் நீட் தேர்வானது கடந்த ஆண்டு நடத்தப்பட்டதைப் போன்று பேப்பர் மற்றும் பேனா மூலம் நடைபெறுகிறது. இதற்கு பதிவு செய்யவும், தேர்வில் பங்கேற்கவும் ஆதார் எண் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  12 ஆம் வகுப்பு படிக்கும் அல்லது படித்து முடித்த மாணவர்கள் நாளை முதல் www.nta.ac.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்விற்கான வயது வரம்பு 17 முதல் 25 ஆகும்.

Newstm.i 
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close