கொல்கத்தா: விமானம் மீது லாரி மோதி விபத்து

  Newstm Desk   | Last Modified : 01 Nov, 2018 03:28 pm
water-truck-hits-qatar-airways-plane-at-kolkata-airport-inquiry-ordered

கொல்கத்தாவில் இருந்து தோஹாவுக்கு செல்ல இருந்த கத்தார் விமானத்தின் மீது, தண்ணீர் லாரி ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. 

கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம், இன்று அதிகாலை 3:15 மணி அளவில், 103 பயணிகளுடன் கொல்கத்தாவிலிருந்து தோஹாவுக்கு புறப்படத் தயாராக இருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஒரு தண்ணீர் லாரி, விமானத்தின் மீது மோதியது. இது ஏர் இந்தியா நிறுவனத்தின் தண்ணீர் லாரி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் விமானத்துக்கு சேதம் ஏற்பட்டது. அதே நேரத்தில் விமானத்தில் இருந்த 103 பயணிகளுக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விமானத்தைப் பழுது பார்க்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து அந்த லாரி ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close