இந்திய ‘காந்தம்‘

  பாரதி பித்தன்   | Last Modified : 02 Nov, 2018 09:28 pm
indian-magnet-sardar-patel

காந்தத்தை தெருவில் உருட்டி விட்டு எடுத்துப்பார்த்தால்  கண்ணுக்கு தெரியாத இரும்புதுகள் அனைத்தும் அதில் ஒட்டிக் கொண்டு காந்தம் இருப்பதே தெரியாமல் போய்விடும். அதற்கு இணையாக இந்தியா விடுதலையானபோது படேல் என்ற காந்தம் நாடு முழுவதும் சுற்றியதால் தான் இன்று இந்தியா என்றொரு தேசம் நம்கைகளில் கிடைத்துள்ளது.  ஆனால் நேரு மற்றும் அவரின் வாரிசுகள் ஆட்சியில் இருந்த காரணத்தால் வைரம் கரியாகவும், உப்புக்கல் வைரமாகவும் மாறிவிட்டது.

உப்புக்கல்லை வைரமாக உணர்வது தப்பில்லை என்றாலும், வைரம் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா? அதற்கான முயற்சி தான் இது . 

இந்தியா கலாச்சாரத்தில் ஒன்றாகவும், நிர்வாக ரீதியாக 548 சமஸ்தானங்களாகவும் பிரிந்து இருந்தது. இது ஆங்கிலேயேர்கள் இந்தியாவை பிடிக்க வரும் போது கூட இது தான் நிலை. பெரும்பாலான மாநிலங்கள் அவர்களுக்கு கப்பம் கட்டியது. புதுச்சேரி போன்றவை ஆங்கிலேயர் வசம் இல்லாவிட்டால் கூட பிரெஞ்சுக்கு அடிமையாத்தான் இருந்தது. ஒரே போர் ஒரே இரவில் ஆட்சி மாற்றம் என்று இல்லாமல், ஒவ்வொரு சமஸ்தானமாகத்தான் ஆங்கிலேயேர்கள் சாம, தான, தண்டம் என்று அனைத்து போர் முறைகளையும் கையாண்டு தங்கள் ஆளுமையின் கீழ் ஆங்கிலேயர்கள் இந்தியாவை கொண்டு வந்தார்கள்.

அவர்களின் சர்வதேச கொள்கை பிரித்து ஆட்சி செய் ஆட்சி செய்ய முடியாத நிலை தோன்றும் போது பிரி, குலை, அழி, வெளியேறு எனபதுதான். உலகம் முழுவதும் கிழக்கு, மேற்கு ,வடக்கு தெற்கு என்று நாட்டின் பெயருன் இணைத்த அனைத்து நாடுகளும் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுதலை அடைந்தவையாகத்தான் இருக்கும். அவற்றில் பெரும்பாலானவை இன்று வரை சேர முடியாமல் போனதன் காரணம் இது தான். இதே நிலைதான் இந்தியாவிற்கும் ஆங்கிலேயேர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போது இந்தியா, பாகிஸ்தான் என்று மட்டும் பிரிக்காமல் சமஸ்தானங்களாகவும் பிரித்து தான் சுதந்திரம் கொடுத்தனர். அதாவது நாங்கள் எப்படி நாட்டை பிடித்தோமோ, அப்படியே திரும்ப கொடுத்துவிட்டோம் என்றது நிலைப்பாட்டின் வெளிப்பாடு தான். இது.

அவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போது , சமஸ்தானங்களுக்கு, நீங்கள் இந்தியாவுடன் இணையாலாம், பாகிஸ்தான் கூட இணையலாம், தனித்தே இருக்கலாம், அல்லது ஆங்கிலேயர்களுடன் இணையாலாம் என்று 4 வாய்ப்புகளை கொடுத்து சென்றனர்.

இதில் காந்தியும் அவர் கிழித்த கோட்டை தாண்ட விரும்பாத சர்தார் படேலுக்கும் இந்தியா ஒரே நாடு என்ற எண்ணம். ஆனால் நேருவுக்கோ இந்தியா ஒரு துணைக் கண்டம் என்ற எண்ணம். இந்த இரு எண்ணங்களின் இணைப்பு காந்திதான். அவரால் தான் நேரு பிரதமராக உருவாக முடிந்தது. 1946ம் ஆண்டு மீரட்டில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாடு நடக்கிறது. ஆச்சாரியா கிருபாளினி மாநாட்டின் தலைவர். சுந்திர இந்தியாவிற்கு யார் பிரதமர் என்று ஓட்டெடுப்பு நடக்கிறது. 19 மாநிலத் தலைவர்கள் ஓட்டுப் போடுகிறார்கள். அதில் படேல் 16ஓட்டு பெறுகிறார். நேருவுக்கு 2 ஓட்டு, ஆ்சாரியா கிருபாளினி ஒரு ஓட்டு பெறுகிறார். ஆனால் காந்திக்கோ படேலை விட நேருவின் தந்தை காலத்தில் இருந்தே சுந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அதனால் நேரு பிரதமரானால் தான் நல்லது என்ற எண்ணம். படேலை பேச்சுவார்த்தை மூலம் காந்தி சமாதானம் செய்கிறார். நேரு பிரதமராக மாறுகிறார். துணைப் பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகிய பதவிிகள் பட்டேலுக்கு வருகின்றன. இப்போது பல்வேறு சமஸ்தானங்களை ஒன்று இணைக்க வேண்டிய பொருப்பு படேல் வசம் வந்தது.

அவர் அனைத்து சமஸ்தான மன்னர்களையும் அழைத்து உங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும்; 40 ஆண்டுகள் மானியம் கிடைக்கும். அதற்குள் நீங்கள் மக்களுடன் மக்களாக கலந்துவிட வேண்டும். உங்கள் சமஸ்தானம் இந்தியாவுன் இணைந்துவிட வேண்டும் என்றார். அதை ஒப்புக் கொண்டு முதன் முதலில் சமஸ்தானத்தை ஒப்படைத்தவர் புதுக்கோட்டை மன்னர். அவர் சமஸ்தானத்தை ஒப்படைத்து விட்டு திருச்சியில் சாதாரண மக்களை போல தொழில் செய்து வாழ்ந்தார். இன்றும் அவரது வாரிசுகள் எந்த பந்தாவும் இல்லாமல் வாழ்கிறார்கள். இந்த உடன் பாட்டை ஏற்காத சமஸ்தானங்கள் 3 இருந்தன. குஜராத் மாநிலத்தில் உள்ள ஜீனாகத், காஷ்மீர், ஐத்ராபாத் ஆகியவை தான் அது.

ஜீனகத் சஸ்தானத்தை பாபி குல நாவாப்(யூசுப் பதான்) ஆட்சி செய்தார். அங்குள்ள மக்களுக்கு சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்க ஆசை. ஆனால் மன்னருக்கு பாகிஸ்தானத்துன் இணைக்க ஆட்சி . தன் சொந்த மாநிலத்தில் இந்த நிலை என்றதும் படேல் ஜீனகத் சமஸ்தான மக்களை சந்தித்து பேசி, அதன்முடிவில் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதாக அறிவிக்கிறார். பிறகு ‘ வழக்கமான கவனிப்புகளுடன்’ மன்னர் விரட்டப்படுகிறார். இங்கு திவானாக இருந்தவர் பேரன் தான் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பூட்டோ. 

ஹைத்ராபாத்  மன்னர் சமஸ்தானம் பாகிஸ்தானும், வேண்டாம், இந்தியாவும் வேண்டாம் நாங்கள் தனியே ஆட்சி செய்கிறோம் என்று முடிவெடுகிறார். அந்த நிலையே சுந்திரத்திற்கு பின்னரும் ஓராண்டு தொடர்கிறது. இப்படி தனியே ஒரு ஆட்சி இருப்பதன் இடையூறு காரணமாக இந்தியா .ஹைத்ராபாத் சமஸ்தானத்தின் மீது பொருளாதார. தடைவிதிக்கிறது. தொடர்ந்து 1948 செப்டம்பர் 13 ம்தேதி ஆபரேஷன் போலோ என்ற பெயரில் ராணுவ நடவடிக்கை தொடர்கிறது. 5 நாட்கள் தொடந்த போரின் முடிவில் ஹைத்ராபாத் நிஜாம் தோல்வியை தழுவுகிறார். அதுவும் இந்தியாவுன் இணைகிறது.

மீதி இருப்பது காஷ்மீர் ஒன்றுதான்;  அங்கு ஆட்சி செய்த மன்னர் ஹரி சிங் சமஸ்தானத்தை இந்தியாவுன் இணைக்க விரும்பினார்.  ஆனால் பெரும்பான்மையாக இருந்த இஸ்லாமியர்கள் அதற்கு இணங்காமல் பாகிஸ்தானுடன் இணைய வலியுறுத்தினர். இதில் மன்னருக்கு எதிராக போர் மூண்டது. ஒருகட்டத்தில் ஹரி சிங் இந்தியாவின் உதவியை கோரினார். இங்கோ பட்டேலுக்கு பதிலாக நேரு தானே இந்த விவகாரத்தை பார்த்துக் கொள்வதாக கூறினார். ஆனால் பாகிஸ்தான் பகுதியில் இருந்த ராணுவத்தினர் இந்த போரில் ஈடுபடவில்லை. 

இதை இந்தியாவுன் இணைக்கும் முயற்சியில் தானே களம் இறங்கினார் நேரு. அப்போது பாகிஸ்தான், இந்தியா நாடுகளின் ராணுவத் தலைவர் ஒருவர் தான். .போர் தொடந்து நீடிக்கிறது. ஆனாலும் வெற்றி கிட்டும் நிலை இல்லை. இந்த தகவல் அறிந்ததும் படேல் பாகிஸ்தான் பகுதியில் உள்ள ராணுவ வீரர்களை அனுப்ப உத்தரவிடுகிறார். இதற்கு மறுத்தால் இந்தியாவிற்கு என்று ராணுவதளபதி தனியே உருவாவார் என்ற எச்சரிக்கையுன் அந்த உத்தரவு செல்கிறது. வேறு வழியில்லாமல் பாகிஸ்தான் பகுதி ராணுவமும் போரில் குதித்தது. இதன் விளைவாக பாகிஸ்தான் வசம் தற்போதுள்ள ஆசாத் காஸ்மீர்( விடுதலை பெற்ற காஸ்மீர்) தவிர்த்து மற்ற இடங்களில் எல்லாம் போர் நடத்தியவர்கள் தோல்வியை தழுவுகின்றனர். ஆனாலும் இழுபறி நீடிக்கிறது. போர் இன்னும் ஒரு சில நாட்கள் நீடித்தால் இந்தியா பக்கம் முழு காஷ்மீரும் இணைந்திருக்கும். ஆனால் மவுன்ட் பேண்டன் ஆலோசனைப்படி இந்த பிரச்னையை ஐநாசபைக்கு கொண்டு செல்கிறார் நேரு. அங்கு நம்ம ஊர் கோர்ட் போல இப்போது இருக்கும் நிலையே நீடிக்கட்டும் என்று உத்தரவிடப் படுகிறது. இதனால் தான் இந்தியா தற்போது பார்க்கும் வடிவடித்தோடே நின்று விட்டது. அத்துடன் பாகிஸ்தானின் இன்று வரை .தொல்லையை கொடுக்கிறது.

இப்படிபட்ட வரலாற்றின் நாயகன் தான் படேல். இவருக்கு தான் உலகிலேயே உயரமான. சிலை உருவாகி இருக்கிறது. 547 சமஸ்தானங்களை எந்த விதமான பிக்கல் பிடுங்கள் இல்லாமல் இணைத்த  படேலுக்கு இந்தியாவே எழுந்து நின்றது போன்ற சிலை பட்டேலுக்கு அவசியமா? அல்லது ஒரே ஒரு சமஸ்தானத்தை இணைக்க களம் இறங்கி, இன்றவுளவும் அதனை முள்கிரீடமாக மாற்றிவிட்ட நேருமாமாவிற்கு சிலை வைக்க வேண்டுமா என்ற முடிவு உங்கள் சிந்தனைக்கே.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close