அமைதியான சூழலை விரும்புகிறது இந்தியா: பிபின் ராவத்

  Newstm Desk   | Last Modified : 03 Nov, 2018 12:55 am
india-s-aim-is-to-ensure-a-conducive-external-and-internal-security-environment-bipin-rawat

அமைதியான சூழ்நிலை நிலவ வேண்டும் என்பது தான், இந்தியாவின் எண்ணம் என்று ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் பேசியபோது, எல்லையை விரிவுபடுத்தும் ஆசை, இந்தியாவுக்கு இல்லை எனவும், நம் கொள்கையை, அடுத்தவர்கள் மீது திணிக்கும் எண்ணமும் இல்லை எனவும் குறிப்பிட்டார்.  

இந்த இரண்டும் தான், இந்திய பாதுகாப்பு கொள்கையின் அடிப்படை அம்சங்கள் எனவும், தடையற்ற பொருளாதார வளர்ச்சி, சமூக, அரசியல் மேம்பாடு ஆகியவற்றுக்காக, அமைதியான சூழ்நிலை நிலவ வேண்டும் என்பது தான், இந்தியாவின் எண்ணம் என்றும் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத்  குறிப்பிட்டார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close