ஆசியா பீபீ வழக்கறிஞர் நாட்டை விட்டு வெளியேறினார்!

  Newstm Desk   | Last Modified : 06 Nov, 2018 02:13 am
asia-bibi-s-advocate-leaves-to-netherlands

பாகிஸ்தான் நாட்டில் மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளான ஆசியா பீபீ வழக்கில், அவருக்கு ஆதரவாக வாதாடி விடுதலை வாங்கிக் கொடுத்த வழக்கறிஞர் சைபுல் முலூக்கின் உயிருக்கு ஆபத்து இருந்ததால், அவர் நெதர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். 

இஸ்லாமிய கடவுளை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்தவ பெண் ஆசியா பீபீயை சமீபத்தில் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. அவருக்கு விடுவிக்கப்பட்டதற்கு எதிராகவும், கடவுளை அவமதித்தலுக்கு மரண தண்டனையை ஆதரித்தும் பாகிஸ்தானில் பல அடிப்படைவாத அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், பீபீக்காக போராடிய வழக்கறிஞர் சைபுல் முலூக்கின், பாகிஸ்தானில் இருந்து நெதர்லாந்து சென்று விட்டார். தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி, ஐநா அதிகாரிகள் அவரையும் அவரது குடும்பத்தினரையும் நெதர்லாந்துக்கு அழைத்து வந்துள்ளதாக தெரிவித்தார்.

"எனது விருப்பத்திற்கு எதிராக என்னை அங்கிருந்து கொண்டு வந்துவிட்டனர். அவர் (பீபீ) இல்லாமல் என்னால் மட்டும் எப்படி நிம்மதியாக இருக்க முடியும். இருவரும் ஒரே இடத்தில் இருந்திருக்கலாம். ஆனால், முக்கியமாக எனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிவித்துளள்னர்" என்றார். 

பீபீ தற்போது எங்கு இருக்கிறார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லாத நிலையில், "எனக்கு எதுவும் தெரியாது. ஐநா அதிகாரிகளை கேளுங்கள். பாதுகாப்பு காரணங்களுக்காக என்னிடம் எதுவும் கூறவில்லை" என்றார் முலூக்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close