தாஜ்மகாலுக்குள் தினமும் தொழுகை நடத்த தடை

  ஐஸ்வர்யா   | Last Modified : 06 Nov, 2018 09:02 am
no-namaz-in-mosque-on-taj-mahal-premises-except-fridays

தாஜ்மகாலுக்குள் தினமும் தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டதால் தொல்லியல் துறை அதிகாரிகள் பூட்டு போட்டுள்ளனர்.

தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தாஜ்மகாலில், இஸ்லாமியர்கள் தினமும் நடத்தும் தொழுகையில் வெளிநாடு முஸ்லிம்களும் பங்கேற்பதை எதிர்த்து ஆக்ரா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில்,  வெள்ளிக்கிழமைகளில் வெளியூர் முஸ்லிம்கள் தாஜ்மகாலுக்குள் சென்று தொழுகை செய்ய நீதிபதி தடை விதித்தார்.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தாஜ்மகாலில் வெள்ளிக்கிழமை தவிர மற்ற நாட்களில் தொழுகை நடத்த தடை விதித்தும்,  வெள்ளிக்கிழமை தொழுகையில் உள்ளூர் மக்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்றும் உத்தர விட்டுள்ளது. இதையடுத்து,  தாஜ்மகாலுக்குள் தொழுகை நடத்தும் பகுதியை தொல்லியல் துறை அதிகாரிகள் பூட்டு போட்டு பூட்டினர்.

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close