உத்தரகாண்ட்: ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடிய பிரதமர் மோடி

  டேவிட்   | Last Modified : 07 Nov, 2018 11:31 am
pm-modi-celebrated-diwali-with-soldiers-at-uttarakhand

உத்தரகாண்டில் உள்ள ஹர்ஷில் பகுதியில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று தீபாவளியை கொண்டாடினார். 

பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிப் பண்டிகையை நாட்டின் ஒவ்வொரு பகுதியிலுள்ள ராணுவ வீரர்கள், பாதுகாப்புப் படை வீரர்களுடன் கொண்டாடி வருகிறார்.

2014ம் ஆண்டு சியாச்சினில் உள்ள ராணுவ முகாமில் உள்ள ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.  2015ம் ஆண்டு அமிர்தசரஸிலும், 2016 ம் ஆண்டு இமாச்சலில் உள்ள இந்தோ-திபெத் எல்லையிலும், 2017 ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திப்போராவில் உள்ள பிஎஸ்எஃப் படை வீரர்களுடனும் தீபாவளிப் பண்டிகையை பிரதமர் நரேந்திர மோடி கொண்டாடினார்.

இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹர்ஷிலில் பிரதமர் மோடி ராணுவ வீரர்களுடன் இன்று தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். முன்னாதாக, பிரதமர் மோடி கேதர்நாத் கோவிலில் சாமி தரிசனம் செய்ததோடு, அங்குள்ள  மக்களையும் சந்தித்து பேசினார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close