தாஜ்மகாலை பார்வையிட்ட தென்கொரிய அதிபரின் மனைவி கிம் ஜங்-சூக்

  Newstm Desk   | Last Modified : 07 Nov, 2018 02:14 pm
kim-jung-sook-visited-taj-mahal

அயோத்தி தீபவிழாவில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள தென்கொரிய அதிபரின் மனைவி கிம் ஜங்-சூக் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை இன்று பார்வையிட்டார்.  அவருடன் உத்தரப்பிரதேச அமைச்சர்கள் ஸ்ரீகாந்த் ஷர்மா, ரீட்டா பாஹுகுணா ஆகியோர் உடன் சென்றனர். 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற்ற தீபஉற்சவம் நிகழ்வில், தென்கொரியா அதிபரின் மனைவி கிம் பங்கேற்றார். உத்தரப்பிரதேச ஆளுநர் ராம் நாயக், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் அவருக்கு சிறப்பு வரவேற்பு அளித்தனர். 

இந்நிலையில், தென்கொரியா அதிபரின் மனைவி கிம் ஜங்-சூக் இன்று தாஜ்மகாலுக்கு சென்றுள்ளார். அவருடன் உத்தரப்பிரதேச அமைச்சர்கள் ஸ்ரீகாந்த் ஷர்மா, ரீட்டா பாஹுகுணா ஆகியோர் உடன் சென்றனர். 

முன்னதாக கடந்த 5ஆம் தேதி டெல்லி வந்தடைந்த கிம் ஜங்-சூக் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். பின்னர் லக்னோ வந்தடைந்த அவருக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரவு விருந்து அளித்து உபசரித்தார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close