பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் !

  பாரதி பித்தன்   | Last Modified : 07 Nov, 2018 11:48 pm

which-one-is-the-reason-for-delhi-s-pollution

உலகம் எங்கும் சிறுபான்மையினருக்கு மரியாதை அதிகம்.தொழில் துறையும் விதிவிலக்கு அல்ல. இங்கு பெரும்பான்மை என்பது சிறு, குறு, நுண், நடுத்தர நிறுவனங்கள். சிறுபான்மை என்பது கார்ப்பரேட் நிறுவனங்கள்.

பெரும்பான்மை நிறுவனங்களை கட்டுப்படுத்தவோ, அவற்றில் இருந்து தனிப்பட்ட லாபம் பார்க்கவோ முடியாது என்பதால் சிறுபான்மை நிறுனங்களுக்கு அரசு எளிதில் அனுமதி கொடுக்கும். அதற்கு நெருக்கடி வராமல் பாதுகாக்கும்.

இதற்கு உதாரணமாக மது தயாரிப்பு மற்றும் விற்பனையை சொல்லாம். இலக்கிய காலத்தில் இருந்தே மது என்றால் அது கள் தான். இதை நம்பி பல லட்சம் மக்கள் உள்ளனர். ஆனால் இவர்களை ஒருங்கிணைப்பதோ, அவர்களிடம் இருந்து கனிசமான தொகை வசூலிப்பதோ சாத்தியம் இல்லை. இதன் காரணமாக அரசு  உள்நாட்டில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுக்களுக்கு அனுமதி கொடுக்கிறது.  மது  தயாரி்ப்பு நிறுவனங்கள் எண்ணிக்கை வெகு சொற்பம் என்பதால், அரசு கள்ளின் தரத்தை கண்காணிக்க முடியாது தனது முடிவுக்கு நியாயம் கற்பிக்கிறது.  கள் நல்லது ; உணவின் ஒரு பகுதி என கள் நல்லசாமி கடந்த 10 ஆண்டுகளுக்கும் அதிகாமாக போராடி வருகிறார். ஆனால கண்டு கொள்ளத்தான் ஆள் இல்லை.

இதே போன்றுதான் .கோகோ கோலா இந்தியாவில் நுழைந்த வரலாறும். 1956ம் ஆண்டு முதன் முதலில் 100 சதவீதம் அன்னிய, நேரடி முதலீட்டுடன் களம் இறங்கியது. இந்திராகாந்தி அன்னிய பரிவர்த்தனை மேலாண்மை சட்டத்தை 1974 கொண்டு வரும் எந்தவிதமான தடையும் இல்லாமல் கோகோ கோலா தன் விற்பனையை தொடர்ந்தது. இந்த சட்டத்தின் படி வெளிநாட்டு நிறுவனம் இந்தியாவில் தொழில் செய்ய வேண்டும் என்றால் அதன் இந்திய கூட்டளியிடம் 40 சதவீதம் அன்னிய செலாவணியை முதலீடு செய்ய வேண்டும். இதை ஏற்றுக் கொண்ட கோகோ கோலா நிறுவனம், 40 சதவீதம் முதலீட்டை மட்டும் செய்தது. ஆனால் நிறுவனத்தின் கட்டுப்பாட்டையும், தொழில்நுட்பத்தையும் தன் வசமே வைத்திருந்தது. காங்கிரஸ் கட்சியின் ஆட்சி முடிந்து ஜனதா ஆட்சிக்கு வந்ததும் கோகோ கோலா நிறுவனத்தை அன்னிய செலாவணி பரிவர்த்ததை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் அல்லது நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று வற்புறுத்தியது. அதற்கு அந்த நிறுனவனம் நாட்டை விட்டு வெளியேறியது.

பின்னர் 1993ம் ஆண்டில் இந்தியா தராளமயமாக்கல் முறையை ஏற்றதும் கோகோ கோலா நிறுவனம் மீண்டும் இந்திய சந்தையை கைபற்ற முயன்றது. இந்த நிறுவனம் இந்தியாவிற்கு வர வேண்டும் என இந்திய பாராளுமன்றத்தில் எம்பிகள் கையெழுத்திட்டு தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி, அது வெற்றி பெற்றது. அந்த நிறுவனம் இந்தியாவில் இன்றளவும் விற்பனையை தொடர்ந்து வருகிறது. ஒரே நிறுவனம் நினைத்தால் எம்பிக்களை கூட லாபி செய்ய முடியும் என்பதற்கு இது நல்ல உதாரணம்.

இதே கதை தான் தற்போது டெல்லி மாசு குறித்து நீதிமன்ற உத்தரவும்,  மாசு ஏற்படுவதற்கான முக்கிய, முதன்மைக் காரணத்தை கண்டு அதற்கு தடைவிதி்க்க வேண்டிய உச்ச நீதிமன்றம்  லட்சக்கணக்கான இந்துக்கள் குறிப்பாக சிறுவர், சிறுமியர் விரும்புகிற பட்டாசுகள் விற்க தடைவிதித்தது.

உண்மையில் டில்லி மாசு ஏற்ப என்ன காரணம்? அறிந்து கெள்ள விரும்பினால் தொடர்ந்து படியுங்கள்...

மான்சான்டோ அமெரிக்காவின் வேளாண் உயிரி தொழில்நுட்ப கூட்டுநிறுவனம். இந்த நிறுவனம் மீது 1999–2000ம் ஆண்டில் பிடி பருத்தியின் சாகுபடி குறைந்து, ஆந்திராவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது, போன்ற பல விவகாரங்கள் உள்ளன. இந்த நிறுவனம் அமெரிக்காவில் நடைபெறும் தேர்தல்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த அளவு வலிமையான நிறுவத்திற்கு பிரச்னை என்றதும்  அமெரிக்க அரசு மான்சான்டோ பதுகாப்பு சட்டம் இயற்றுகிறது. 

அதே காலகட்டமான  2007ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் நிலத்தடி நீர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது. இதன் பின்னர் நெல் சாகுபடி பரப்பை குறைக்கும் முயற்சியால் 1.5 லட்சம் ஏக்கர் சாகுபடி கைவிடப்படுகிறது. ஆனால் பிடி மான்சான்டோவின் பிடி காட்டன் சாகுபடி கனிசமாக உயர்ந்தது.  இதன் விளைவாக 1.

5 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது:

2009ம் ஆண்டில் இந்தியாவில் மான்சான்டோ பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதன் பின்னர் மாநில அரசு நெல் சாகுபடியை தாமத்தப்படுத்துகிறது. இதற்கு பஞ்சாப், டெல்லி அரசுகளுகளின் மான்சான்டோ ஆதரவு தீவிரமாக இருப்பதே காரணம். சாகுபடி  அறுவடையும், அதன் பின்னர் நிலத்தை சமன்படுத்தி எரிப்பதும் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் பருகாற்று மேற்கில் இருந்து டில்லி நோக்கி வந்து அந்த நகரையே புகை மண்டலமாக மாற்றிவிடுகிறது. டில்லி, பஞ்சாப் ஆட்சியாளர்கள் மான்சான்டோ நிறுவனத்துடன் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு வைத்திருப்பதால் டில்லி மாசுக்கு உண்மையில் காரணமான மான்சான்டோ பற்றி யாரும் பேசுவதில்லை. ஒரு சில ஆங்கில நிருபர்கள்  எழுதுவது அடித்தட்டு மக்களை சென்று அடைவதில்லை. இதே காலகட்டத்தில் தீபாவளியும் வருவதால் மாசு ஏற்பட வெடி வெடிப்பதே காரணம் என்று முடிவு கட்டி அதற்கு ஏற்ப உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்க்கும் வகையில் லாபி செய்ய பட்டாசு நிறுவனங்கள் கார்ப்ரேட் நிறுவனங்கள் அல்ல. 

ஆனால் மக்கள் பெரும்பாலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அறிந்ததாக காட்டிக் கொள்ளாமல் விடிய விடிய பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். நாட்டின் எல்லா பிரச்னைகளுக்கும் இது போன்றவை தான் நிரந்தர தீர்வு தரும்.

- பாரதி பித்தன்

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.