பணமதிப்பிழப்பு நடவடிக்கை: மன்மோகன் சிங் குற்றச்சாட்டு

  Newstm Desk   | Last Modified : 08 Nov, 2018 01:12 pm
manmohan-singh-on-denomination

நரேந்திர மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டு மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு, இதே நாளில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். இந்த அறிவிப்பு வெளியானதுமே ஒட்டுமொத்த நாடும் அதிர்ச்சிக்குள்ளானது. 

ஏடிஎம் வரிசையில் நீர், உணவின்றி காத்து நின்ற நூற்றுக்கணக்கானோர் உயிரிழக்க நேரிட்டது. காங்கிரஸ் உள்பட  அனைத்து கட்சிகளும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்ததோடு, இந்திய ஜனநாயகம் மற்றும் பொருளாதாரத்தின்  ஒரு "கறுப்பு நாள்" என்று விமர்சித்தன.

இந்நிலையில், மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டு மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

பணமதிப்பிழப்பு நாட்டின் பொருளாதாரத்தின் மீதும் சமூகத்தின் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதல் எனவும், இதற்குச் சமூகத்தின் ஒவ்வொருவரும் சாட்சியாக உள்ளதாகவும் மன்மோகன் சிங் தெரிவித்தார். மேலும், வயது, பாலினம், மதம், தொழில் பாகுபாடு இல்லாமல் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பணமதிப்பிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

பொருளாதாரத் தவறான போக்குகள் நீண்ட காலத்திற்கு தேசத்தை எவ்வாறு அழிக்கின்றன மற்றும் பொருளாதார கொள்கைகளை சிந்தனை மற்றும் கவனத்துடன்  கையாள வேண்டும் என்பதை புரிந்து கொள்ள இன்றைய தினம் ஒரு எடுத்துக்காட்டாகும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close