யார் வேண்டுமானாலும் வாகனங்களுக்கு இ-சார்ஜ் செய்யலாம்

  Newstm Desk   | Last Modified : 09 Nov, 2018 09:57 am
any-one-can-e-charge-the-e-vehicles

இனி தனிநபர்கள் யார் வேண்டுமானாலும் இ வாகனங்கள் எனப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் தொடங்கலாம் என்ற முறை விரைவில் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

எலக்ட்ரானிக் வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் தொடங்குவதற்கு மத்திய அரசு இதுவரை எந்த தகுதியும் நிர்ணயிக்கவில்லை. இதனால் இந்த சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் தொடங்க உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டியதில்லை. அதே சமயம் எலக்ட்ரானிக் வாகன சார்ஜ் ஏற்றும் மையங்களின் தரம் மற்றும் செயல்பாடுகளை கண்காணிக்க மத்திய மின்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாகன தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் மகேந்திரா &  மகேந்திரா, டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்களும், ஓலா, ஊபர் போன்ற வாடகை கார் இயக்கும் நிறுவனங்களும் நாடு முழுவதும் எலக்ட்ரானிக் வாகன சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றன. சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் வைத்துள்ள நிறுவனங்களுக்கு மின்சார விநியோகம் செய்வதற்கான கட்டணத்தை மாநில அரசு நிர்ணயிக்க உள்ளது.

ஒவ்வொரு 3 கி.மீ.க்குள் ஒரு சார்ஜ் ஏற்றும் நிலையத்தை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. தனிநபர்கள் யார் வேண்டுமானாலும் உரிமம் பெறாமலேயே சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் அமைக்கலாம் என அரசு கூறி இருப்பதன் மூலம் சிறு தொழில்துறையில் ஏராளமான வேலைவாய்ப்புக்கள் உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close