அகற்றப்படுவார்களா அர்பன் நக்சல் ?

  பாரதி பித்தன்   | Last Modified : 11 Nov, 2018 04:45 pm
is-it-possible-to-wash-out-urban-naxals

மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள அரசுகள் மக்கள் நன்மைக்காகத்தான் இருக்கின்றன. உண்மையில் அப்படித்தானா என்று ஆராய்ச்சி செய்தால், அப்படி இல்லை என்பது தான் நமக்கு பதிலாக கிடைக்கும். இதற்கு ஆட்சியாளர்களைவிட அதிகாரத்தில் இருப்பவர்கள் தான் முக்கிய காரணமாக இருக்கிறார்கள். பெரும்பாலான அமைச்சர்கள் அதிகாரிகளை மட்டுமே நம்பி ஆட்சி செய்கிறார்கள். திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகளை தவிர்த்து பெரும்பாலான கட்சிகளின் அமைச்சர்கள் புதிதாக பொறுப்புக்கு வருகிறார்கள். அவர்களுக்கு வழிகாட்டி அதிகாரிகள் தான். அவர்கள் செயல்படாமல் இருப்பது, அரசுக்கு தவறான வழிகாட்டுவது போன்றவற்றால் தான் அப்பாவி மக்கள் பிரச்னைகளை சந்திக்கிறார்கள். அதற்கு சரியான தீர்வு கிடைக்காத நிலையில் போராட்டம், புரட்சி போன்ற கருத்துக்கள் வெற்றி பெறுகிறது. அந்த கொதிப்பின் உச்சம் தான் நக்சல்களாக வடிவெடுக்கிறாகிறார்கள்.

சார் உங்க பகுதியில் 15 நாளாக  தண்ணீர் வரவில்லை. பல இடங்களிலும் போராட்டம் மனு கொடுத்தும் பலன் இல்லை.வழியே இல்லாமல் நீங்கள் சாலைமறியலில் ஈடுபடுகிறீர்கள், அங்கு வரும் பொதுமக்களான உங்களுக்கு தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்து தர வேண்டும். அதற்கு பதிலாக போராடும் உங்களை தடிஅடி நடத்தி கலைக்கிறார்கள். இப்போது சொல்லுங்கள் மக்களுக்காக போலீசா, அல்லது அரசுக்கு ஆதரவாக போலீசா என்று கேட்கிறார் முன்னாள் நக்சல் ஒருவர். யதார்த்தத்தை பார்த்தால் அவர் கூறுவது சரிதான் என்பது போல இருக்கிறது.

இது போன்ற சூழ்நிலைகள் தான் நக்சல்கள் உருவாகி. கடந்த 1967 மே மாதம் மேற்கு வங்க மாநிலம் நக்சல் கிராமத்தில் விவசாயிகள் போராட்டம் வெடிக்கிறது. 25ம் தேதி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர போலீசார் துப்பாக்கி சூடு நடத்துகி்றாரகள். அதில் 2 குழந்தைகள், 8 பெண்கள் கொல்லப்படுகிறார்கள். இவர்கள் சிந்திய ரத்தம் நக்சல் இயக்கமாக உருவாகிறது. அதன் பின்னர் பல பெயர்களில் இயங்கி நக்சல் இயக்கம் 2004 ம் ஆண்டு முதல் மாவோயிஸ்ட் என்று அழைக்கப்படுகின்றனர்.

இயக்கம் தொடங்கிய காலகட்டத்தி்ல் மேற்கு வங்கம், சத்தீஸ்கர், ஒரிசா ஆகிய மாநிலங்களில் நக்கசல் இயக்கும் பரவியது. அதே நேரத்தில் ஆந்திரா, தமிழகம் ஆகியவற்றிலும் இதன் வேர்கள் துளர்விட்டன.

இந்த மாநிலங்களில் எல்லாம் ஏழைகள் ஏழைகளாகவும், அவர்கள் பசிக்கு சோறு இடுவதற்கு பதிலாக முகத்திற்கு பவுடர் கொடுக்கும் அரசுகளாக இருந்ததும் நக்சல் போராட்டம் தீவிரம் அடைய காரணமாக இருந்தது. மேற்கு வங்கத்தில் பல ஆண்டுகள் காங்கிரஸ், அதன் பிறகு இடதுசாரிகளும் ஆட்சியில் இருந்தும் கூட ஏழைகள் ஏழைகளாகத்தான் வாழ்ந்தார்கள். அதிகாரத்தை நெருங்கி விட்டால் இடதுசாரிகள் கூட ஏழைகளை மறந்துவிடுகிறார்கள் என்பது அவர்களுக்கு எதிராக நக்சல்கள் நடத்திய போராட்டமே சான்று.

உழுபவனுக்கு நிலம் சொந்தம் என்ற ஒன்றை கோஷத்தை அடிநாதமாக கொண்டு எழுந்த நக்சல் இயக்கம்; அதே மேற்கு வங்கத்தில் கடந்த 2007ம் ஆண்டு மார்ச் 14 அன்று நடந்த நந்திகிராமத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் போலீசாரும் மாக்சிஸ்ட்கள் இணைந்து துப்பாக்கி சூடுநடத்தினர். இதில் 8 பேர்  இறந்தனர். அப்போது புத்ததேவ்பட்டாச்சாரியா தான் முதலமைச்சர் என்பது தான் இன்னும் கொடுமை.

 

குடும்பத்தில் தொடங்கி நாடு வரை வளர்ச்சி என்று வரும் போது இழப்புகள் ஏற்படத்தான் செய்யும். ஆனால் வளர்ச்சியடைந்த நிலை பற்றிய கனவு அதனால் ஏற்படும் பாதிப்பை உணர செய்வதில்லை. ஒரு ஊருக்காக ஒரு குடும்பத்தை இழக்கலாம். ஒரு நாட்டிற்காக ஒரு கிராமத்தை இழக்கலாம், ஒரு உலகத்திற்காக நாட்டை இழக்கலாம் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறியுள்ளன. இதன் அடிப்படையில் பிரச்னைகளை அணுகினால் நக்சல்கள் உருவாவதை தடுத்து விட முடியும்.

ஆனால் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி இது போல சிந்திக்காத காரணத்தால் தான் வடமாநிலங்களில் நக்சல்கள் ஆதிக்கம் வளர்ச்சியடைந்தது.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தளவில் மத்தியில் ஆட்சியில் இருந்தால் போதும். அதற்கு இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்வது மட்டுமே காங்கிரஸ் கட்சியின் திட்டம். அதற்கு ஏற்ப சுதந்திர போராட்ட காலத்தில் நாட்டின் முக்கிய எதிர்கட்சியாக இருந்த இடதுசாரிகள், ஆட்சியை பிடித்து தங்கள் லட்சியத்தை நிறைவேற்ற எண்ணாமல் தங்களுக்குள் தகராறு செய்து நாள் தோறும் சுருங்கி தேய்ந்து விட்டது. ஆனால் அமைச்சர்கள் ஆகாத இடதுசாரிகள், கல்விநிறுவனங்கள், அதிகார வர்க்கம் போன்றவற்றி்ல் நுழைந்து கொண்டு தங்கள் லட்சியத்தை நிறைவேற்றினார்கள். ஆனாலும் ஆளும் தரப்பினர் ஓட்டு அரசியல் அவர்களை முழுமையாக செயல்படவிடவில்லை. இதன் காரணமாக நாடுமுழுவதும் எப்போதும் பதட்டமான சூழ்நிலையே நீடித்து வருகிறது.

பெரும்பாலும் காங்கிரஸ் கட்சி இவர்களை எப்படி கையாள்வது என தெரிந்ததால் எந்த விதமான பிரச்னைகளையும் அதிகார வர்கத்தில் நுழைந்துவிட்ட நக்சல்கள் சந்திக்கவில்லை. ஆனால் மத்தியில் எதிர்கட்களின் ஆட்சி உருவாகும் போது, அவர்களுக்கு என தனிப்பட்ட கொள்கைகள் இருப்பதால் அவற்றை அரசு இயந்திரத்திற்குள் புகுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். தங்கள் இருப்பிடம் காலியாகும் சூழ்நிலையில் நக்சல்கள் வெளிப்படுகிறார்கள். கடந்த காலத்தை போல அவர்கள் களம் இறங்கி போராடுவது இல்லை. ஆனால் அரசுக்கு எதிராக உருவாகும் சிறு பொறியை ஊதி பெரிதாக்கி நாடுமுழுவதும் பதட்டத்தை ஏற்படுத்துகிறார்கள். தற்போதுள்ள மோடி அரசின் போது இவர்கள் நடவடிக்கை அதிகரிக்க, மேக் இந்தியா திட்டம், கச்சா எண்ணை வாங்க ரூபாய் நோட்டுகள் வாங்கும் திட்டம்,ஜிஎஸ்டி, ரூபாய் நோட்டு இழப்பு அறிவிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இது போன்ற நக்சல்களுக்கு பின்புலமாக இருக்கிறார்கள். அதனால் தான் சத்தம் அதிகம் கேட்கிறது.

அதற்காக இது போன்ற நக்சல்களை அழித்து ஒழிப்பது மட்டும் அதற்கு தீர்வாக அமையாது. அது எதிர்விளைவுகளை மட்டுமே ஏற்படுத்தும். அதற்கு பதிலாக நோய் நாடி நோய் முதல் நாடி என்பதைப் போல மக்கள் பிரச்னைகள் உருவாகும் போதே அரசு அதிகாரிகள் அதற்கு தீர்வுகாணும் நடவடிக்கையில் ஈடுபட வைத்தால், நக்சல்கள் தோன்றுவதற்கான காரணமே இல்லாமல் போகும். அர்பன் நக்சல்கள் சூரியனைப்பார்த்து நாய் குலைக்கும் நிலையாகத்தான் இருக்கும். அது சூரியனுக்கு எந்தவிதத்திலும் பாதிக்கப்படுவதாக இருக்காது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close