நாளை விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3- டி2 ராக்கெட்..!!

  Newstm Desk   | Last Modified : 13 Nov, 2018 10:19 am
tomorrow-goes-on-skies-gslv-mark-3-t2-rocket

ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3- டி2 ராக்கெட் மூலம் ஜிசாட் 29 செயற்கோள் நாளை விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, பூமியை கண்காணிப்பது, கடல்சார் ஆராய்ச்சி, தகவல் தொடர்பு மற்றும் வானிலை பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான செயற்கைகோள்களை வடிவமைத்து வெற்றிகரமாக ராக்கெட்டுகளில் பொருத்தி விண்வெளிக்கு செலுத்தி வருகிறது. இந்நிலையில், உயர்நுணுக்கமான தகவல் தொடர்புக்கான ஜிசாட் 29 என்ற செயற்கோளை தயாரித்துள்ளது. 

இது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3- டி2 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட்  10 டன் எடை கொண்ட பொருட்களை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது,  3 ஆயிரத்து 423 கிலோ எடை கொண்ட ஜிசாட்-29 செயற்கைகோளை சுமந்து செல்லவுள்ளது.  இதில் தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்படும் அதிநவீன சக்தி கொண்ட ‘கா.கு.பாண்ட்’ டிரான்ஸ்பாண்டர்களும், தகவல் தொடர்பு தே வைகளை பூர்த்தி செய்வதற்கு க்யூ, வி என்ற நவீனதொழில்நுட்ப கேமரா மற்றும் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த செயற்கைகோள் நாளை  மாலை 5 மணிக்கு இதமான காலநிலை நிலவும் பட்சத்தில், விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close