பிரதமர் மோடி - நம் தேசத்தின் வரமா? சாபமா?

  பாரதி பித்தன்   | Last Modified : 15 Nov, 2018 05:09 pm
is-pm-modi-our-nation-s-gift

பாலகுமாரனின் நாவல் ஒன்றில் கதாநாயகன் முதலிரவு அறைக்குள் செல்லும் போது அவன் தந்தை ”என்னடா ஏதேனும் சொல்லி தர வேண்டுமா” என்பார். அதற்கு இல்லப்பா நானே கத்துக்கிறேன். சைக்கிள் ஓட்ட நானே தானே கத்துக்கிட்டேன் அது போல இதையும் கத்துகிறேன் என்பான் அந்த கதாநாயகன். அதைக் கேட்டதும், அவன் அப்பா சைக்கிள் உயிரற்றது. இப்போது நீ உயிருடன் இருப்பவளிடம் கற்றுக் கொள்ளப் போகிறாய் என்று பதில் சொல்லுவார். தற்போது நம் நாடும் இதே சூழ்நிலையில் தான் பிரதமரைப் பெற்றுள்ளது.

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து 14 பிரதமர்கள் மாறிவிட்டனர். இதில் இந்தியாவை செதுக்கிய பிரதமர்கள் என்றால் நேரு, இந்திரா காந்தி,  ராஜிவ் காந்தி, நரசிம்மராவ், வாஜ்பாய், மோடி ஆகியோரைக் குறிப்பிடலாம். இவர்களில் மோடியை தவிர்த்து மற்ற அனைவருக்கும் மத்திய அரசியலில் பின்புலம், அனுபவம் கொண்டவர்கள். 

இந்தியாவின் முதல் பிரதமரான நேரு அரசியல் உலகில் தன் தந்தையின் விரல்களை பிடித்துக் கொண்டே காலடி வைத்தார். அவரின் .செல்வசெழிப்பு, இங்கிலாந்தில் அவர் பெற்ற உயர்கல்வி ஆகியவற்றின் அடிப்படையிலேயே அரசில் அவரது முடிவுகள் இருந்தன. படேல் போல உள்நாட்டிலேயே வளர்ந்திருந்தாலோ, அம்பேத்கர் போல தீண்டத்தகாத நிலையில் எழுந்து ஓகோ என உயர்ந்திருந்தாலோ, இந்த நாட்டைப்பற்றிய பார்வை நேருவுக்கு வேறு விதமாகத்தான்  இருந்திருக்கும்.

ஒரு குண்டுஊசி கூட இந்தியாவில் தயாரிக்காத நிலை, சாதாரண ஜிப்புகள் கூட இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் போன்ற சூழ்நிலையில் தான் நேரு ஆட்சி செய்ய வேண்டியிருந்தது. நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை கட்டமைக்க வேண்டி இருந்த நேருவால், உலகத்தை திரும்பிப் பார்க்க வைக்க முடியாத நிலைதான் இருந்தது. பிரதமராக நேரு வெற்றி பெற்றார் என்பவர்கள் கூட அவர் வெளியுறவுக் கொள்கையால் தோல்வி உற்றார் என்பதை சிறிது ஆதாரப்பூர்வமாக விமர்சனம் செய்தால் ஏற்றுக் கொள்வார்கள்.

சமஸ்தான இணைப்பில் நேரு பொறுப்பேற்றது காஷ்மீர் மட்டும் தான் ஆனால் அதில் சிக்கல் ஏற்பட்டு பாகிஸ்தான் இந்தியா போர் வந்தது. இந்த விவகாரம் இன்று வரை தீராமல் தொடர்ந்து கொண்டிருந்தது. அவர் சீனாவை நம்பி ஏமாந்தது அவர் இழைத்த பெரும் சோகம். இவர் ஆட்சியில் இருந்த 1947 முதல் 1964 வரையிலான காலகட்டத்தில் இந்தியா பச்சைக்குழந்தை. அமெரிக்காவும், ரஷயாவும் பனிப் போர் நடத்திய காலகட்டத்தில் நடுநிலை என்ற பாதையில் பயணித்தவர் நேரு. காஷ்மீர் விவகாரத்தை தேவையில்லாமல் ஐநாவிற்கு கொண்டு சென்று அதன் விரல் நீட்டிலுக்கு ஆடவேண்டிய நிலையில் மாற்றியவரும் நேருவே.

அவரின் சீனா பற்றிய கணிப்பு முற்றிலும் பொய்த்துப் போனது. இதனால் தான் போரில் அதனை எதிர்க்கொள்ள இந்தியாவால் எதிர்கொள்ள முடியவில்லை. இடத்தை இழந்து விட்டோம் என்ற ஆத்திரத்தை விட அங்கு புல் பூண்டு கூட முளைக்காது என்று நேருவால் ஆறுதல் தேடிக் கொண்டது அவரின் சீனா பற்றிய கணிப்பு தான். பொறுப்புகளை தானே வைத்துக் கொண்டது, அடுத்த கட்ட தலைவர்கள் உருவாக வழியில்லாமல் போய்வி்ட்டது. அவரின் நில  சீர்திருத்தங்களை காங்கிரஸ் கட்சித் தலைவர்களே தோல்வி அடைய செய்தனர். அவரின் அணைக்கட்டு பற்றிய திட்டங்களோ ஏழை இந்தியர்களை நடுத்தெருவில் நிறுத்தியது. மேலும் காங்கிரஸ் கட்சியே நேருவின் பல நடவடிக்கைகளை முடக்கிப் போட்டது.

 நேருவுக்கு அடுத்து அவர் மகள் இந்திராதான் இந்தியாவின் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு காரணமான பிரதமர். சீனா, பாகிஸ்தான் போர், வறட்சி, உணவு பற்றகாக்குறை, அந்நிய செயலாவணி கையிருப்பு குறைவு என்று நஷ்ட இந்தியாவிற்கு  தலைமை ஏற்று அதனை துாக்கி நிறுத்தியவர் இந்திரா. அதே நேரத்தில் நேரு, பெரோஸ் காந்தியால் கூட ஏற்க முடியாத பல கருத்துக்களை கொண்டு இருந்தவர் இந்திரா. கணவராலேயே கடுமையாக விமர்ச்சிக்கப்பட்ட அவர், ஆட்சியில் தன்னை சுற்றியே பலவற்றை சிந்தித்தார். அதன் காரணமாக தான் ஜனநாயகத்தின் கறுப்பு அத்தியாயமாக எமர்ஜென்சி உருவானது.  அவரை பாதுகாத்துக் கொள்ள எடுத்த நடவடிக்கைகள் தான் மீண்டும் காங்கிரஸ் கட்சி தமிழகம் போன்ற மாநிலங்களில் எழமுடியாமலும், மற்ற மாநிலங்களில் வீழ்ச்சிப்பாதையிலும் சென்று கொண்டிருக்க காரணம். தனக்கு எதிரான கருத்துக்கள் வெளி வருவ.தையே விரும்பாத இந்திரா காந்தியால் ஊடக சுதந்திரம் குறித்து பேச கூட முடியாதநிலை அந்த காலகட்டத்தில் ஏற்பட்டது. பின்னர் அவர் கணவர் பெரோஸ் அறிமுகம் செய்த தனி நபர் சட்டத்தால் தான் பத்திரிகைகள் சுந்திர காற்றை சுவாசிக்க முடிந்தது. பொதுவாக கூற வேண்டும் என்றால் சூடான ஐஸ்கிரீம் என்பதைப் போல நல்ல சர்வாதிகாரியாத்தான் திகழ்ந்தார். ஆனால் அது ஜனநாயக நாட்டிற்கு தவறான முன்னுதாரணம்.

தென்னிந்தியாவில் இருந்து பதவியேற்ற பிரதமர் நரமசிம்மராவ் ஆட்சி காலத்தில் தான் இந்தியா தன் பொருளாதார பாதையை மாற்றிக் கொண்டது.அவர் ஆட்சியில் பணவீக்கம் 16 சதவீதமாகவும், தொழில் உற்பத்தி முடக்கம், ஏற்றுமதியில் தொய்வு போன்றவை நரசிம்மராவ் எத்தகு முள் நாற்காலியில் அமர்ந்திருந்தார் என்பதை நன்கு உணர்த்தும். அப்போது இந்தியாவின் அன்னிய செலாவணி கையிறுப்பு வெறும் 1000 கோடி ரூபாய் தான். கடந்த .செப்டம்பர் 2 வாரத்தில் இந்தியாவின் கையிருப்பு 28 லட்சம் கோடி ரூபாய்.

நிதிபற்றாக்குறை ஜிடிபியில் 8 சதவீதம். கடந்த 20018 பட்ஜெட்டில் இது 3.2 சதவீதமாகவும் 2019ம் ஆண்டின் இலக்காக 3 சதவீதமாககவும் நிர்ணயம் செய்ப்பட்டுள்ளது.  நரசிம்மராவின் பொருளாதார நடவடிக்கைகள் விமர்சனத்திற்குள்ளான நிலையிலும் தான் உள்ளது.

அதலபாதாளத்தில் தள்ளப்பட்டியிருந்த நாட்டை நரசிம்மராவ் சமதளத்திற்கு கொண்டு வந்த நிலையில் பொறுப்பேற்ற வாஜ்பாய்க்கு கூட பலவிதமான சவால்கள் இருந்து கொண்டிருந்தன. தேவையற்ற சுமையைாக கூட்டணி கட்சிகள். அவர்களை அனுசரித்து போக வேண்டிய கட்டாயம். 13 மாத ஆட்சியில் போயஸ்கார்டனை த்தான் பல பாஜ தலைவர்கள் குடியிருப்பாக மாற்றிவிட்டனர். அதே போல மாறன் கோமா நிலைக்கு தள்ளப்பட்டால் கூட அவர் மத்திய அமைச்சராகவே பாதுகாக்கப்பட்டார் என்ற போது வாஜ்பாய் எத்தனை விலங்களை காலில் கட்டிக்கொண்டு நடைபோட்டார் என்பது நன்கு விளங்கும். எதிர்கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் தவறுகளை அறிந்து அவற்றிக்கு மாற்று முறைகளை தீட்டி வைத்திருந்த எதிர்கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் கூட கூட்டணி, செய்ய வேண்டிய பல கடமைகள் போன்றவற்றால் சாதிக்க முடியாமல் சங்கடத்தில் தள்ளிவிட்டுவிடும் இந்த நிலைதான் வாஜ்பாய் வைரம் போல பிரகாசிக்க முடியாமல் குடத்தில் இட்ட விளக்காக மாறிவிட்டதற்கு காரணம்.

நம் நாட்டில் பல விஷயங்களை இறைவன் தான் முடிவு எடுப்பார். அப்படிப்பட்ட நிலை தான் பாஜ மத்தியில் ஆட்சி பொறுப்பேற்றதும் தென் இந்தியாவில் பெரும்பாலும் ஆதரவு இல்லாத நிலையில் கூட பாஜ மத்தியில் பாஜ தனித்தே 282  இடங்களில் வெற்றி பெறறது. திமுக சட்டசபைத் தேர்தலில் தோற்று, ஆட்சியை இழந்த போது, ஸ்டாலின் திமுக ஏன் தோற்றது என்றும் தெரியவில்லை. அதிமுக எப்படி வென்றது என தெரியவில்லை என தேர்தல் முடிவு குறித்த தனது முதல் பேட்டியில் கூறியது போல, 282 இடங்களை பாஜ பிடிக்கும் என்று பாஜவில் சில தலைவர்களே நினைத்து இருக்க மாட்டார்கள்.  இந்தியப் பிரதமராக மோடி பதவி ஏற்புவிழாவில் தெற்காசிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்ட போதே, உலகிற்கு மறைமுகமாக மோடி பல விஷயங்களை மவுன மொழியி்ல் கூறினார். அன்று உலக நாடுகளை திரும்பி பார்கக வைத்த மோடி இன்றும் கூட உலக நாடுகள் இந்தியா என்ன சொல்கிறது என்று பார்த்தே முடிவு எடுக்கும் நிலையில் இருப்பதற்கு மோடியின் ராஜதந்திர நடவடிக்கைகளே காரணம்.

பொருளாதாரத்தில் கூட பணமதிப்பு இழப்பு, நடவடிக்கை, ஜிஎஸ்டி போன்ற பல அதிரடி நடவடிக்களை மேற்கொண்டு நாட்டினை வளர்ச்சிப்பாதையில் திருப்பியவர் மோடி. இதனால் தான் கடந்த 2017ம் ஆண்டு அமெரிக்காவின் தர மதீப்பீட்டு நிறுவனம் மூடிஸ் 13 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவின் தர மதீப்பீட்டை பிஏஏ 3 என்ற இடத்தில் இருந்து பிஏஏ 2 என்று மாற்றியது. பிரிக்ஸ் நாடுகளில் இந்தியா தான் பொருளாதாரத்தில்  வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. இதற்கு மோடி அரசின் சீர்திருத்த நடவடிக்கைள் தான் காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர். 

பண வீக்க விகிதம் குறைந்தது, குறைவான வட்டி வீதம் போன்ற நடவடிக்கைகள் தான் பொருளாதாரத்தை தடைகளை தாண்டி வெற்றி பெற செயது வருகிறது. நடப்பு ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி சீனாவை விட அதிகம் இருக்கும் என்று ஐஎம்எப் கணித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டில் 26 ஆயிரத்து 230 கோடி டாலராக இருந்த ஏற்றுமதி 2017ம் ஆண்டில் 27 ஆயிரத்து 470 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இதற்கு மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் தான் கை கொடுத்தது என்பது தொழில்துறையினர் கருத்து.

வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடும் ஆண்டுக்கு ஆண்டு 15 சதவீதம் வளர்ச்சியடைந்து வருகிறது.2017ம் ஆண்டின் நவம்பர் மாத புள்ளிவிபரப்படி  60 ஆயிரத்து 100 கோடி டாலர் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளது.

இன்னொருபுறம் மோடியின் சர்வதேச அரசியல் காரணமாக சீனா,அமெரிக்கா, பாகிஸ்தான், இலங்கை போன்ற இந்தியாவிற்கு ஆதரவு நிலை எடுக்க முடிந்தது. சீனா பிடித்த இடங்களில் புல் பூண்டு முளைக்காத இடம் தான் என்று பாராளுமன்றத்தில் கூறிய பிரதமர் வாழ்ந்த நாட்டில், ஈரானில் எண்ணை வாங்க விதித்த தடையை தற்காலிகமாக நீக்க வைத்த பிரதமரும் ஆட்சி செய்கிறார் என்பதை எத்தனை பேர் எண்ணிப் பார்த்திருப்பார்கள். இந்த தடையை நீக்க நாடு ஒன்றும் கையாலாகத நாடு அல்ல. தன் குடிமக்கன் ஒருவனுக்கு பாதிப்பு என்றால் கூட போர் தொடுக்கும் வல்லமை கொண்ட அமெரிக்கா என்ற போது மோடியின் ராஜதந்திரம் வெளிப்படும்.

வளர்ச்சிக்கான தரப்பட்டியலை வெளியிடும் அமெரிக்க நிறுவனமான மூடிஸ் இந்தியா பற்றிய தன் கணிப்பை மாற்றிக் கொள்ளாத போது பிரிக்ஸ் நாடுகளுக்கு என்று தனியாக மதிப்பீட்டு நிறுவனம் அமைப்போம் என்று அதிரடித்து மூடிஸ் நிறுவனத்தை ஜால்ரா கொட்ட வைக்க மோடியால் மட்டும் தான் முடியும்.

இவரின் பொருளாதார நடவடிக்கைகள் தான் இந்தியாவை தொழில் செயற்வதற்கு ஏற்ற நாடுகள் பட்டியில் 30 இடங்களை முன்னேற வைத்து 100 இடத்தை பிடிக்க செய்தது. இதை உலக வங்கியே பாராட்டி உள்ளது என்பதன் மூலம் எந்தளவு சாதனை என்று அறிந்து கொள்ளலாம்.

அதே நேரத்தில் பண மதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி வரி, இ–வே பில் போன்று பல சீர்திருத்த நடவடிக்கைளை ஒரே பேக்கேஜ் போல அறிமுகம் செய்தது தொழில்துறையின் வளர்ச்சிக்கு தடைக்கல்லாக இருந்தது என்னவோ உண்மைதான். அதே நேரத்தில் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை ஒரு சில மாதங்கள் அடித்தட்டு மக்களுக்கு சிரமத்தை கொடுதாலும், ரெய்டுகளின் போது புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக பிடிபடுவது இந்த திட்டத்தில் அமலாக்கத் தோல்வியை வெளிச்சம் இட்டு காட்டுகிறது.  ஆனால் இந்த தோல்வி எத்தனை திருடர்கள் மத்தியில் வாழ்கிறோம் என்பதை எடுத்துக் காட்டுகிறது. திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது தான் இந்த அமலாக்கத் தோல்வியில் கிடைக்கும் பாடம்.

இஸ்ரேல், இந்தியா ஆகிய இரு நாடுகள் மட்டும் தன் உலகில் சுற்றி தீ வளர்த்து உள்ளே இருக்கும் ஐஸ்கிரீம் போன்ற நாடுகள். இதில் உள்ளூர் பிரச்னையாளர்கள் இந்தியாவிற்குள் வைக்கப்பட்ட தீ. இந்த சூழ்நிலையில் இந்தியாவின் அமைதியை பாதுகாக்க மோடி செய்த பல நடவடிக்கைள் வெளியே வரவே இல்லை.

இந்தியாவின் எதிரிகளில் பாகிஸ்தான், சீனா முக்கியமானவர்கள், இந்த பட்டியலில் தற்போதும் நேபாளம் இணைந்து இருக்கிறது. இலங்கையும் வேறு வழியில்லாமல் சீனாவிற்கு அன்னக்கையாக இருக்கிறது.

இதில் சீனாவின் கொட்டத்தை அடக்கினால் இந்தியாவிற்கு பலவித்திலும் நல்லது. அதனால் தனா் பூட்டான் இந்தியாவுடன் நெருங்கம் காட்ட அனுமதிக்கப்பட்டது. சீனாவின் வடக்கே இருக்கும் ஏழை நாடான மங்கோலியாவுடன் உறவு பாராட்டும் நடவடிக்கையை மோடி தொடங்கினார்.

இதே போல ஜப்பான், பலுாசிஸ்தான், ஈரான் என்று நாம் வரைபடத்தில் மட்டுமே பார்த்த நாடுகளை தற்போது இந்தியா நேசநாடுகளை மாற்றி உள்ளது.

இது வரை அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் மட்டுமே ஆப்பிரிக்க நாட்டுகளின் வரமளிக்கும் தெய்வங்களாக தோற்றம் அளித்த நிலையில் ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள எல்லா நாட்டு தலைவர்களையும் அழைத்து டெல்லியில் மாநாடு நடத்தி இந்தியாவின் வலிமையை உணர்த்தி உள்ளார். இந்தியா வராவிட்டால் நாங்களும் வரமாட்டோம் என்று உலக நாடுகள் சொல்லும் நிலை பிரதமர் மோடியால் உருவானது என்று சொன்னால் அது மிகையாகாது.

இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் எழுதிக் கொண்டே போகலாம். இவை எல்லாவற்றிக்கும் மோடி தான் காரணம். அவர் தானே முன்னின்று பாதை வகுத்துக் கொண்டு இந்தியாவை முன்னெடுத்து செல்கிறார். ஆனால் நமக்கோ இது பற்றியெல்லாம் சிந்திக்க கூட .தெரியாது. 20 ரூபாய் டோக்கனுக்கு கூட நம்பி வாக்குரிமையை தந்துவிட்டு ஏமாந்து நிற்பவர்கள். இது வரையில் நாம் பெரிதாக நினைத்த தலைவர்கள் மோடியை பற்றி தகறாக சொல்வதால் நாமும் கூட உண்மையாக இருக்கு.மோ என நினைக்கிறோம். இந்த சூழ்நிலையில் வரும் தேர்தலில் மோடி இது போல மீண்டும் ஆட்சியை தொடர முடியாவிட்டால், இந்தியாவின் பல நடவடிக்கைகள் அரைக்கிணறு தாண்டியதாக மட்டுமே இருக்கும். அதன் பின்விளைவு இது வரையில் நாம் சந்திக்காததாக இருக்கும். அதில் இருந்தும் இறைவன் இந்தியாவை காப்பாற்றுவான் என்று நம்புவோம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close