ஃபேஸ்புக் மூலம் பயங்கரவாதத்தை தூண்டிய பெண் கைது

  சுஜாதா   | Last Modified : 19 Nov, 2018 05:01 am
kashmiri-woman-arrested-for-luring-youths-into-terrorism-through-facebook

காஷ்மீரில் ஃபேஸ்புக் மூலம் இளைஞர்களை பயங்கரவாதத்துக்கு தூண்டிய பெண்ணை உளவுத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

 காஷ்மீர் மாநிலம் பண்டிபோரா மாவட்டத்தை சேர்ந்தவர் சாஷியா. திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவர்,  ஃபேஸ்புக் மூலம் இளைஞர்களை பயங்கரவாதத்துக்கு  தூண்டுவதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.    

இதனை தொடர்ந்து,  உளவுத்துறை அதிகாரிகள் சாஷியாவின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்து  வந்தனர். பின்னர் உறுதிசெய்யப்பட்ட குற்றங்களின் அடிப்படையில் அவரின்  'ஃபேஸ்புக்'  கணக்கை முடக்கி அவரை அதிரடியாக கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், சாஷியா தனது ‘பேஸ்புக்’ மூலம் ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளில் சேரவும், ஆயுதங்களை வாங்கவும் இளைஞர்களுக்கு அழைப்புவிடுத்து வந்தது உறுதிசெய்யப்பட்டது. மேலும் அவரிடம் இருந்து அனந்த்நாக் மாவட்டத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் சமீபத்தில் ஆயுதங்கள் வாங்கி சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களில் ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். 

முன்னதாக, சாஷியாவின் வீட்டில் நடத்திய சோதனையில் ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் இந்த வழக்கு தொடர்பாக சாஷியாவின் சகோதரர்கள் 2 பேரையும் உளவுத்துறை அதிகாரிகள் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இது குறித்து பேசிய அதிகாரி, சாஷியாவுக்கு பயங்கரவாத இயக்கத்தின் தளபதிகளுடன் தொடர்பு இருக்கிறதா என்பது பற்றி அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close