மேற்கு வங்கம்: ரூ.3 கோடி தங்க கட்டிகள் பறிமுதல்

  சுஜாதா   | Last Modified : 19 Nov, 2018 05:17 am
gold-worth-rs-3-crore-seized-in-west-bengal-man-arrested

மேற்கு வங்க மாநில ரெயில் நிலையத்தில், அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.3 கோடி மதிப்பிலான அந்த தங்க கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்து  ராஜூ ஆதா கைஷ் என்பவரை கைது செய்தனர்.

மேற்கு வங்க மாநிலம் அவுராவில் இருந்து அசாம் மாநிலம் திப்ருகார் நோக்கி சென்ற காம்ருப் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மர்மநபர் தங்கம் கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து மாறுவேடத்தில் மேற்கு வங்க மாநிலம் புது ஜல்பய்குரி ரெயில் நிலையத்திற்கு சென்ற அதிகாரிகள் அங்கு சோதனை மேற்கொண்டனர். 

அப்போது மேற்கு வங்க மாநிலம் கூக்ளியை சேர்ந்த ராஜூ ஆதாஷ் என்பவர் தான் அணிந்திருந்த பெல்ட் மற்றும் ஷூவில் தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 9 கிலோ எடையுள்ள, ரூ.3 கோடி மதிப்பிலான அந்த தங்க கட்டிகளை பறிமுதல் செய்த போலீசார் ராஜூ ஆதாஷை கைது செய்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், தங்க கட்டிகள் மியான்மரில் இருந்து மணிப்பூர் வழியாக கடத்திவரப்பட்டதாக தெரியவந்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close