தொழில் அதிபர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

  டேவிட்   | Last Modified : 19 Nov, 2018 08:44 am
modi-meets-industrialists-in-delhi

டெல்லியில் தொழில் அதிபர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

உலகில் எளிதாக தொழில் தொடங்க உகந்த நாடுகளின் தர வரிசைப் பட்டியலை உலக வங்கி தயாரித்து அளித்தது. கடந்த மாதம் வெளியான இந்த பட்டியலில் இந்தியா, 23 இடங்கள் முன்னேறி 77-வது இடத்தைப் பிடித்து உள்ளது.இந்தப் பட்டியலில் முதல் 50 நாடுகளில் இந்தியா இடம் பிடிக்க வேண்டும் என்பது மத்திய அரசின் கனவாக அமைந்துள்ளது.

இந்த கனவை நனவாக்குவதற்காக மத்திய தொழில் கொள்கை மற்றும் ஊக்குவிப்பு துறையின் சார்பில் டெல்லியில் இன்று (நவ.19) கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார். இந்திய தொழில் கூட்டமைப்பு, இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு, இந்திய தொழில் மற்றும் வர்த்தக தொடர்புடைய சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

மேலும், ஆனந்த் மகிந்திரா உள்ளிட்ட முன்னணி தொழில் அதிபர்களும், மத்திய அரசின் உயர் அதிகாரிகளும் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது. இந்த கூட்டத்தின்போது, நாட்டில் எளிமையாக தொழில் தொடங்க உகந்த சூழல்களை மேம்படுத்தவும், சீர்திருத்தவும் முக்கிய ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக தகல்கள் வெளியாகியுள்ளன. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close