இந்திய கடற்படைக்கு போர் கப்பல்கள்: ரூ.3570 கோடி மதிப்பில் ரஷ்யாவுடன் ஒப்பந்தம் 

  டேவிட்   | Last Modified : 20 Nov, 2018 09:51 pm
india-russia-sign-500-million-deal-for-construction-of-two-warships

இந்தியக் கடற்படைக்கு  போர்க்கப்பல்கள் தயாரிக்க இந்தியா - ரஷ்யா இடையே ரூ.3570 கோடி மதிப்பில் ஒப்பந்தம் இன்று  (20/11/2018 ) கையெழுத்தாகியுள்ளது.  

இந்த ஒப்பந்தமானது பாதுகாப்புத் தளவாடங்கள் தயாரிக்கும் இந்திய பொதுத்துறை நிறுவனமான கோவா ஷிப்யார்ட் லிமிட்டட் (ஜி.எஸ்.எல்) மற்றும் ரஷ்ய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் ரோசோபோரோன் நிறுவனத்திற்கும் இடையே கையெழுத்தாகியுள்ளது.இந்த ஒப்பந்தமானது இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு அடிப்படையின் கீழ் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஒப்பந்தத்தின் கீழ் போர்க்கப்பல்கள் தயாரிக்கத் தேவையான வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் ஒரு சில முக்கியமான பாகங்களை, ஜி.எஸ்.எல்லுக்கு ரஷ்ய நிறுவனம் வழங்கவுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close