யமுனா நதி மாசுபடுவதைக் குறைக்க ரூ.1573.28 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு என்எம்சிஜி ஒப்புதல்!

  சுஜாதா   | Last Modified : 26 Nov, 2018 01:06 am
nmcg-approves-rs-1573-28-cr-sewage-projects-to-reduce-water-pollution-in-river-yamuna

தாஜ்மஹாலை பாதுகாக்கவும், உத்தரப்பிரதேசம், பீஹார், மேற்குவங்கம் மற்றும் ஹிமாச்சலப்பிரதேசம் ஆகிய பகுதிகளில்  காற்று மாசுபடுவதைக் குறைக்கவும் ரூ.1573.28 கோடி மதிப்பிலான கழிவு நீர் அகற்றும் திட்டங்களுக்கு என்எம்சிஜி ஒப்புதல் அளித்துள்ளது.  

ரூ.1573.28 கோடி மதிப்பிலான 10 திட்டங்களுக்கு கங்கையைத் தூய்மைப்படுத்தும் தேசிய இயக்கத்தின் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.  மத்திய நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கையை தூய்மைப்படுத்துதல், சாலைப்போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலை, கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர்  நிதின் கட்கரி, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், ஆக்ராவில் யமுனா மாசுபடுவதற்கான பிரச்சினைகளுக்கு பரிகாரம் காண  மேற்கொள்ள வேண்டிய ஒட்டுமொத்த தீர்வின் அவசியம் குறித்து முடிவு செய்யப்பட்டது. 

மறுசீரமைப்பு / ஆக்ரா கழிவுநீர் அகற்றும் திட்டத்தைப் புதுப்பித்தல் ஆகியவற்றுக்கு 15 ஆண்டுகளில் 857.26 கோடி ரூபாய்  செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆக்ரா நகரிலிருந்து யமுனா நதி வரை மாசுபடுதை இந்தத் திட்டங்கள் வெகுவாகக் குறைக்கும் என்றும், இதன் மூலம் தாஜ்மஹால் பாதுகாக்கப்படுவதுடன் அதன் அழகும் மேம்படும் என்றும், சுற்றியுள்ள நதிநீரின் தரம், நிலத்தடி நீரின் தரம் உயர்த்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.   

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close